நாளை ஷார்ஜாவில் நகரத்தார் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம்
ஷார்ஜா: ஷார்ஜாவில் ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகியன ஆன்மீகமும் அறிவியலும் எனும் தலைப்பில் நாளை(28.09.2012) மாலை 4 மணிக்கு அல் கத்தரி பண்ணையின் செட்டிநாடு இல்லத்தில் நடைபெற இருப்பதாக செயலாளர் முத்துராமன் கதிரேசன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பு தலைவர் ராமநாதன் ரமேஷ் தலைமை தாங்குகிறார். செயலாளர் முத்துராமன் கதிரேசன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். செல்வன் சோமசுந்தரம் இறைவணக்கம் பாடுகிறார். செல்வி வித்யா சீனிவாசன் திருக்குறள் வாசிக்க, செல்வி அபிராமி முத்துராமன் மற்றும் செல்வி ஐஸ்வர்யா முத்துராமன் ஆகியோர் சங்கப்பாடல் பாடுகின்றனர்.
நகர கோவில் ஒரு பார்வை எனும் தலைப்பில் நகரத்தார் கூட்டமைப்பு குழந்தைகள் தயாரிப்பில் குறும்படம் இடம்பெறுகிறது.
கவிஞர் தியாகராஜன், மணிகண்டன் மெய்யப்பன் மற்றும் விசாலாட்சி சண்முகம் ஆகியோரின் பங்களிப்பில் வாங்க பேசுவோம் வாங்க எனும் இலக்கிய நிகழ்ச்சி, சிறுவர் அரங்கம், ராஜகணேஷ் ராமநாதன் வழங்கும் வார்த்தை விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன.
இது குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் 050-3038781/ 055-2056852/ 056-6459778 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.


Click it and Unblock the Notifications
