துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil

துபாயில் சுன்னத் வல்ஜமாஅத் ஐக்கியப் பேரவை நடத்திய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 06.06.2012 அன்று மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலக்கிய ஆய்வாளர் திருச்சி சையது ஹதீஸ்களை தொகுத்து வழங்கினார். விருதை மு செய்யது ஹுசைன் இறைகீதம் பாடினார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில பேச்சாளர் திருப்பத்தூர் நாவலர் கௌஸ் முஹைதீன் நபிகள் நாயகத்தின் வாழ்வு குறித்து விரிவாக விவரித்தார்.
அதனைத் தொடர்ந்து ஸ்கைசீ இயக்குநர் சீனாதானா செய்யது அப்துல் காதர், முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் ஆகியோர் குறிப்புரைகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்படிருந்தது.












Click it and Unblock the Notifications