சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளருக்கு வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

Trichy Jamal Mohamed college secretary
சிங்கப்பூர்: சிங்கப்பூருக்கு வந்த திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளரும், நிர்வாகக்குழு செயலாளருமான ஏ. கே. காஜா நஜுமுதீன் சாஹிபிற்கு முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் 25.03.2012 அன்று அளிக்கப்பட்டது.

வரவேற்புரை நிகழ்த்திய ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் முஹிய்யித்தீன் அப்துல் காதர் தனது உரையில் ஏ. கே. காஜா நஜீமுதீன் சாஹிப் அவர்களின் அயராத 25 ஆண்டு கால உயர் கல்விச் சேவையையும், சாதனையையும் பாராட்டி பொன்னாடை போர்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் அக்கல்லூரியின் நிர்வாகத் துறை பேராசிரியர் முஹம்மது பாஜில், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் சங்கத்தின் தலைவர் நசீர் கனி, எழுத்தாளர் ஷாநவாஸ் அப்துல் காதர் மற்றும் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும், முன்னாள் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி 1951ம் ஆண்டு நிறுவப்பட்டு 61 ஆண்டுகள் உயர் கல்விச் சேவையை வழங்கி வருகிறது. தன்னாட்சி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற இக்கல்லூரி, சென்ற ஆண்டு “ஆற்றல் வளத் தனித்தகுதி” (COLLEGE WITH POTENTIAL FOR EXCELLENCE) சான்றிதழ் பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்திருக்கிறது. பல்வேறு இளங்கலை, முதுகலை மற்றும் உயர்கல்வி ஆராய்ச்சி பட்டப்படிப்புகளை வழங்கி வரும் இக்கல்லூரியில் சுமார் 11,000 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+