துபாயில் நடந்த முத்தமிழ்ச் சங்க பொங்கல் விழா: வாசு, கங்கை அமரன், பாலகுமாரன் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா 27.01.2012 அன்று மாலை துபாய் பெண்கள் கல்லூரியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் தலைமை தாங்கினார். திரைப்பட இயக்குநர் பி. வாசு, எழுத்தாளர் பாலகுமாரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
திரைப்பட இயக்குனர் ரவி சுப்ரமணியன், தோஹா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சீதாராமன், இளம்பாரி கருணாகரன், மருதுமோகன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் இசையமைப்பாளர் கங்கை அமரன் தலைமையில் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த விழாவிற்கன நிகழ்விற்கான ஏற்பாடுகளை பாரதி மோகன், அனு அசோக் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.













Click it and Unblock the Notifications