புதிய பர்னஸ் ஆயில் என்ஜினுடன் ஊட்டி மலை ரயில் விரைவில் இயக்கம்
மேட்டுப்பாளையம்: ஊட்டி மலை ரயிலுக்கான புதிய பர்னஸ் ஆயில் என்ஜின் மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தது. இதனால் மலை ரயில் புதுப்பொழிவுடன் விரைவில் இயக்கப்பட உள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயிலுக்கு புதிய என்ஜின்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைகளில் பர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் புதிய என்ஜின்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது.
ஏற்கனவே தயாரான ஒரு பர்னஸ் ஆயில் என்ஜின் மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தது. இன்னொரு என்ஜின் கடந்த 25ம் தேதி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து லோபெட் ரயிலில் ஏற்றப்பட்டு நேற்று மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது.
அந்த என்ஜினை இறக்கி வைக்க ஈரோட்டில் இருந்து 140 டன் எடை கொண்ட மெகா கிரேன் கொண்டு வரப்பட்டது. அதனை ரயில்வே அதிகாரிகள் பார்வையிட்டனர். இதனையடுத்து விரைவில் நீலகிரி மலை ரயில் புதுப்பொழிவுடன் இயக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications