உலக அமைதிக்காக துபாயில் நடந்த மாபெரும் பேரணி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் சர்வதேச அமைதி கருத்தரங்கு அமைப்பு உலக அமைதிக்கான மாபெரும் பேரணியினை 06.04.2012 அன்று மாலை 4 மணிக்கு துபாய் உலக வர்த்தக மையத்தில் தொடங்கி சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் வரை நடத்தியது.
இப்பேரணி அமீரக துணை அதிபர், பிரதம அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளர் மேன்மைமிகு ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஆதரவுடன் நடைபெற்றது. ஷேக் மன்சூர் பின் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் பேரணிக்கு தலைமை வகித்தார்.
இந்த பேரணியையொட்டி பாராசூட் வீரர்கள், நூற்றுக்கணக்கான மோட்டார் பைக்குகள், உயர்தர சொகுசு கார்கள் உள்ளிட்டவையும், ஆயிரக்கணக்கான மக்களும், பள்ளி மாணவ, மாணவியரும் ஆர்வமுடன் பங்கேற்று அமைதியை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
உடல் ஊனமுற்றோரும் தங்களது வீல் சேரில் பங்கேற்று அமைதி முழக்கமிட்டது அனைவரையும் கவர்ந்தது.
இப்பேரணியில் இன, மத, மொழி பேதமின்றி அனைத்து நாட்டு மக்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். காவல்துறையினர் பேரணியில் பங்கேற்ற மக்களை பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!













Click it and Unblock the Notifications