மன்னார்குடியில் பள்ளி மாணவிகளுக்கான கோடைகால குர்ஆன் வகுப்புகள்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: பள்ளி மாணவிகளுக்கான கோடை விடுமுறை குர்ஆர் வகுப்புகள் ஏப்ரல் 20ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை மன்னார்குடியில் நடைபெற உள்ளது.

பள்ளி ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்து விரைவில் கோடை விடுமுறை விடப்படவிருக்கிறது. பள்ளி மாணவிகளின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில் மன்னார்குடியில் தங்குமிடத்துடன் கூடிய குர்ஆன் வகுப்புகள் நடைபெற உள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள வாணக்காரத் தெருவில் உள்ள பெண்கள் அரபி ஹிஃப்ளு மத்ரஸாவில், ஜாமிஆ மன்பஉஸ் ஸாலிஹாத்தில் பள்ளி மாணவிகளுக்கான கோடை விடுமுறை குர்ஆன் வகுப்புகள் நடைபெற உள்ளது. ஏப்ரல் 20ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை நடைபெறும் இந்த வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவிகளுக்கு தங்குமிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குர்ஆன் வகுப்புகளில் தஜ்வீதுடன் குர்ஆன் ஓதும் பயிற்சி, இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்கள், ஐந்து வேளை தொழுகைப் பயிற்சி, சுன்னத்தான துஆக்கள், சுன்னத்தான வாழ்க்கை நடைமுறை, வரலாற்றுச் சம்பவங்கள் (ஹயாத்துஸ் ஸஹாபா), அவசியமான ஹதீஸ்கள் (முன்தகப் அஹாதீஸ்), அரபி மொழி ஆகிய வகுப்புகள் நடைபெறும். மேலும் எம்பிராய்டிங் பயிற்சியும் அளிக்கப்படும்.

இது குறித்து மேலும் விபரங்கள் அறிய விரும்புவோர் 04367-252925, 9500608252 ஆகிய தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+