தபாரெஜ்-ஜித்தா அமைப்பின் சார்பாக குடும்ப ஒருங்கிணைப்பு பல்சுவை நிகழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

ஜித்தா: ஜித்தா, சவூதி அரேபியா தபாரெஜ்-ஜித்தா (TAFAREG-Jeddah) அமைப்பின் குடும்ப ஒருங்கிணைப்பு பல்சுவை நிகழ்ச்சி ஜித்தாவில் நடைபெற்றது. இதில் ஏராளாமான தமிழர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

பல்வேறு நிகழ்ச்சிகளை புதுமையான வகையில் நடத்தி சாதனை படைத்து வரும் தபாரெஜ்-ஜித்தா அமைப்பினர், 10வது குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியை கடந்த 4ம் தேதி இரவு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் குடும்பத்தினர், குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

4ம் தேதி மாலை 7 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சிகள், மறுநாள் அதிகாலை 2 மணிக்கு முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான அறிவுத்திறன் போட்டி, ஓட்டப்பந்தயம், மியூஸிக்கள் சேர், டங் ட்விஸ்டர் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கான ஸ்கிப்பிங், அறிவுத்திறன் போட்டி, ஓட்டப்பந்தயம் ஆகியவை நடத்தப்பட்டன.

அதேபோல் ஆண்களுக்காக அறிவுத்திறன் போட்டி, ஓட்டப்பந்தயம், மியூஸிக்கள் சேர், வாலிபால், கயிறு இழுத்தல், டங் ட்விஸ்டர் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியின் இடையில் மௌலவி.நூஹ் அல்தாபியின் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் தஃபாரெஜ்-ஜித்தா சார்பில் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் வந்திருந்த அனைவருக்கும் மாலை சிற்றுண்டியாக சமோசா, டீ, காபி ஆகியவை வழங்கப்பட்டன. இரவு மட்டன் பிரியாணி வழங்கியதுடன், நிகழ்ச்சி முடியும் வரை குடிநீர், தேநீர், பிஸ்கட், குழந்தைகளுக்காக சிப்ஸ், ஜூஸ் போன்றவைகள் பரிமாறப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தஃபாரெஜ்-ஜித்தா (TAFAREG-Jeddah) அமைப்பினர் செய்து இருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+