பழனி கோவிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தைப்பூசத் தேரோட்டம்
பழனி: தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணமும், வெள்ளி்த் தேரோட்டமும் நடைபெறுகின்றன. நாளை தைப்பூசத் தேரோட்டம் நடைபெறும்.
தமிழகத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில்களில் முதன்மையானதும், முருகப் பெருமானின் மூன்றாம் படைவீடாக விளங்குவது பழனி முருகன் கோவில் ஆகும். அங்கு தைப்பூசத் திருவிழா பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் திருவிழாவின் 6வது நாளான இன்று இரவு 7 மணிக்கு பெரியநாயகி கோவிலில் அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இரவு 8.30 மணி அளவில் வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது.
திருவிழாவின் 7வது நாளான நாளை மாலை 4.30 மணிக்கு மேல் தைப்பூசத் தேரோட்டம் நடக்கிறது. வரும் 10ம் தேதி தெப்பத் தேர் உலாவும், அன்றிரவு கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவடையும்.
இந்த திருவிழாவையொட்டி தினமும் மாலை கோவில் வளாகத்தில் ஆன்மிகச் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொல்லரங்கம் ஆகியவை நடைபெறுகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications