துபாயில் வானலை வளர்தமிழ் நடத்திய கவியரங்கம் மற்றும் இதழ்கள் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 60 மற்றும் 61வது மாத இதழான 'கணிணி’ மற்றும் ‘பயணம்' சிறப்பிதழ்கள் வெளியீடு மற்றும் பயணம் என்ற தலைப்பில் கவியரங்கம் நிகழ்ச்சி கடந்த 11ம் தேதி காலை 10.00 மணியளவில் துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.

நாவலர் கெளஸ் மொஹிதீன் அவர்களும், எமிரேட்ஸ் வங்கியில் பணிபுரியும் திரு.சுப்பிரமணியன் அவர்களும், எமிரேட்ஸ் விமான ஊர்தி நிலையத்தில் பணிபுரியும் திரு.அப்துல் லத்தீப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு குத்தாலம் அஷ்ரப் மற்றும் முதுவை ஹிதாயத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செல்வி ஆனிஷாவின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அபுதாபியில் இருந்து வந்திருந்த அதிரை கவியன்பன் கலாம் கவியரங்கிற்கு தலைமை ஏற்று நடத்தினார். வானலை வளர்தமிழ் ஆலோசகர் காவிரிமைந்தனின் கைவண்ணத்தில் கவியன்பன் கலாம் அவர்களின் மரபுத்தமிழில் ஒவ்வொரு கவிஞருக்கும் வரவேற்புப் பட்டயம் வாசித்தளித்து நினைவுப் பரிசாய் வழங்கப்பட்டது.

'பயணம்’ என்கிற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் காவிரிமைந்தன், ஜியாவுதீன், சி.என்.ரவீந்திரன், சந்திரசேகர், குறிஞ்சிதாசன், திருமதி.பல்கீஸ் சாகுல், குத்தாலம் அஷ்ரப் அலி, திருமதி. யாஸ்மின் அபுபக்கர், திருமதி. நர்கீஸ் ஜியாவுதீன், செய்யது ஹுசேன், திருமதி.கோமதி ராம், அதிரை இளையசாகுல், தஞ்சாவூரான், தெளலத் ஷான் மற்றும் ஜெயராமன் ஆனந்தி ஆகியோரின் கவிதைகள் இடம் பெற்றன. சிந்தனை என்கிற தலைப்பில் பலகுரல் மன்னன் பேசில் ராஜா தன் சிந்தனைகளை முன்மொழிந்தார். நகைச்சுவை நாயகர் முத்துப்பேட்டை ஷரிபுத்தீன் பயணம் பற்றித் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழ்த்தேர் ஆசிரியர் காவிரிமைந்தன் வரவேற்புரையும், தொகுப்புரையும் வழங்க சிறப்பு அழைப்பாளர் தமிழார்வலர் கெளஸ் மொஹிதீன் அவர்கள் தனது உரையில், அதிரையின் சிறப்புகளை எடுத்துரைத்து, அழகு தமிழில் எல்லோர் நெஞ்சங்ளையும் கொள்ளையடித்து, முத்தமிழிலும் மோகனம் பாடி, எண்ணத்தால், எழுத்தால், தனது பேச்சாற்றலால், தனித்திறமை தகுதிகளால், நவரச பாவங்கள் காட்டி, பாடல்களையும் பாடி, பாரதி, பாரதிதாசன் தொடங்கி கண்ணதாசன் வரை அவர்தம் பாடல் வரிகளை நயமுடன் சுட்டிக்காட்டி தசாவதார பாவலர் சேய்குத்தம்பி முதலானோரின் இலக்கிய முன்னோடிகளின் பெருமைகளைப் பட்டியலிட்டு அசத்தினார்.

திரு.கெளஸ் மொஹிதீன் அவர்களுக்கு திரு.அப்துல் லத்தீப் அவர்கள் பொன்னாடை போர்த்த அஸ்கான் ஜாபர் அலி அவர்கள் நினைவுப்பரிசு வழங்கினார்.

எமிரேட்ஸ் வங்கி சுப்பிரமணியன் அவர்களுக்கு தமிழ்த்தேர் சார்பில் நினைவுப்பரிசினை திரு. முரளி பிரபாகர் வழங்கினார். கவியன்பன் கலாமிற்கு சிறப்பு அழைப்பாளர் நாவலர் கரங்களால் சிறப்பு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மாதந்தோறும் இதழ்களைச் சிறப்புடன் வெளிக்கொணரும் பதிப்பாசிரியர் ஜியாவுதீன் அவர்களுக்கு திருமதி.கோமதி ராம் அவர்கள் நினைவுப்பரிவு வழங்கினார்.

‘பயணம்’ சிறப்பிதழின் முதல் பிரதியை நாவலர் திரு.கெளஸ் மொஹிதீன் அவர்கள் வெளியிட திரு.ரவீந்திரன் அவர்கள் பெற்றுக்கொள்ள, இரண்டாம் இதழை திரு.அப்துல் லத்தீப் அவர்கள் வெளியிட திரு.சந்திரசேகர் அவர்கள் பெற்றுக்கொண்டார். மூன்றாம் இதழை திரு.குத்தாலம் அஷ்ரப் வெளியிட திருமதி.பல்கீஸ் சாகுல் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

‘கணிணி’ சிறப்பிதழின் முதல் பிரதியை கவிஞர் அத்தாவுல்லா அவர்கள் வெளியிட திரு.சு.கணேசன் அவர்கள் பெற்றுக்கொள்ள, இரண்டாம் இதழை முத்துப்பேட்டை திரு.ஷரிபுதீன் அவர்கள் வெளியிட திரு.தெளலத்ஷான் அவர்கள் பெற்றுக்கொண்டார். மூன்றாம் இதழை திரு.முதுவை ஹிதாயத்துல்லா வெளியிட திருமதி.யாஸ்மின் அபுபக்கர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

நிறைவாக ஜியாவுதீன் அவர்கள் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கான அனுசரனையை சிவ்ஸ்டார்பவன் உரிமையாளரும், அமைப்பின் தலைவருமான கோவிந்தராஜன் அவர்கள் வழங்க, காவிரிமைந்தன், ஜியாவுதீன், கீழைராஸா மற்றும் கவிஞர் அத்தாவுல்லா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+