பொன்விழா கொண்டாடும் சீன தமிழ் ரேடியோவுக்கு வானலை வளர்தமிழ் வாழ்த்து

இது குறித்து வானலை வளர் தமிழ் அமைப்பின் தமிழ்த்தேர் மாத இதழில் வெளியிடப்பட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
அகிலமெங்கும் அன்னைத் தமிழ் பவனி வர வேண்டும் என்கிற பேராவல் தமிழர்கள் அனைவருக்கும் உண்டு. தமிழர் தம் வரலாற்றில் கடல் கடந்த தேசங்களையும் கட்டி ஆண்ட பாரம்பரியங்கள் உண்டு. உலகில் உள்ள வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் வரிசையிலே இந்தியாவிற்கு இணையான பொருளாதார முன்னேற்றம் பெற்று வல்லரசாய் வடிவெடுத்து வரும் சீன தேசத்தில் நம் தமிழ் மொழியின் ஓசையை கடந்த 50 ஆண்டுகளாக உயரிய சேவையாய் வழங்கி பொன் விழா கொண்டாடுகின்ற இந்திய இனிய வேளையில் நம் உள்ளத்து வாழ்த்துக்களை தொழில்நுட்பக் கலைஞர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், நேயர்கள், வானொலி அறிவிப்பாளர்கள் உட்பட நிலையத்தார் அனைவருக்கும் தமிழ் உணர்வோடு தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications