துபாயில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்புக் கவியரங்கம்
ஈடிஏ எம் மற்றும் இ முதன்மை செயல்திட்ட இயக்குனர் திரு. அன்வர் பாஷா, தமிழாசிரியர் மதநல்லிணக்கச் செம்மல் ஏம்பல் திரு.தஜம்முல் முகம்மது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் சிவ்ஸ்டார் திரு.கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
செல்வி நிவேதிதா தலைமையில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்புக் கவியரங்கம் ‘பூ' என்ற தலைப்பில் நடைபெற்றது. புன்னகையின் வண்ணரதம் பூவாய் மலர்ந்து தன்னெழிலை பரப்பி எல்லோர் மனதிலும் மகிழ்ச்சிப்பூ மழை பொழிந்து இனியதோர் திருநாள் இன்று வந்தது என்று எண்ணும் வண்ணம் கவியரங்கம் மின்னியது. கவியரங்கில்காவிரிமைந்தன், ஜியாவுதீன், கவிஞர் அத்தாவுல்லா, ஹசன் ஜமால், சி.என். ரவீந்திரன், கீழை ராஸா, சந்திரசேகர், புதுவை ரமணி, குறிஞ்சிதாசன், பல்கீஸ் சாகுல், குத்தாலம் அஷ்ரப் அலி, குத்புதீன் ஐபக், காயல் அஹமது சுலைமான் மற்றும் விருதை மு. செய்யது உசேன் ஆகியோரின் கவிதைகள் இடம் பெற்றன.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் அமைப்பின் ஆலோசகர் காவிரிமைந்தன் வரவேற்புரையாற்றினார். பலகுரல் வித்தகர் தஞ்சை பேசில் ராஜா தொகுப்புரை வழங்கினார். அதனைத் தொடந்து சிறப்பு விருந்தினர்கள் திரு.அன்வர் பாஷா அவர்களுக்கு தமிழ்த்தேர் ஆசிரியர் காவிரிமைந்தன் பொன்னாடை போர்த்தினார். கவிஞர் அத்தாவுல்லா நினைவுப் பரிசினை வழங்கினார்.
ஏம்பல் தஜ்மல் முகம்மது அவர்களுக்கு தமிழ்த்தேர் பதிப்பாசிரியர் ஜியாவுதீன் பொன்னாடை போர்த்த, நினைவுப் பரிசுகளை ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் திரு.முதுவை ஹிதாயத், அமைப்பின் பொதுச் செயலாளர் சிம்மபாரதி ஆகியோர் வழங்கினர்.
‘பூ’ சிறப்பிதழின் முதல் பிரதியை திரு.அன்வர் பாஷா வெளியிட திருமதி. சுந்தரிகோபி அவர்கள் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை திரு. தஜம்முல் முகம்மது வெளியிட திரு.சுனில் குமார் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியை வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ் வெளியிட திரு.சசிக்குமார் பெற்றுக்கொண்டார்.
சிறப்பு விருந்தினராய் பங்கேற்ற திரு.அன்வர் பாஷா ஏற்கனவே வெளிவந்த அமைப்பின் பல இதழ்களில் இருந்து, பல்வேறு வரிகளை மனனம் செய்து வைத்திருந்து அவற்றை நெஞ்சாரப் பாராட்டி நெகிழச் செய்தார். அருவிபோல் தமிழ் பொங்கிவழிய தம் இனியநல் பேச்சாலே அனைவரது இதயங்களையும் ஈர்த்தார். தொடர்ந்து ஏம்பல் தஜம்முல் முகம்மது சிறப்புரையாற்றினார்.
பன்முகத் திறமைகளுக்கு களம் அமைத்துத் தரும் தமிழ்த்தேர் பாடகர் திரு. காதர்மொகய்தீன் மற்றும் திரு. பேசில்ராஜா ஆகியோரின் பாடல்களும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன. இறுதியாக கீழை ராஸா நன்றியுரையாற்றினார்.
காவிரிமைந்தன், ஜியாவுதீன், சிம்மபாரதி, கீழை ராஸா, கவிஞர் அத்தாவுல்லா மற்றும் ஆதிபழனி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications