துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி
துபாய்: கடந்த 26ம் தேதி துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் சார்பில் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி துபாய் ரிக்கா மெட்ரோ நிலையம் அருகில் உள்ள புளோரா கிராண்ட் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமீரகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் 250க்கும் அதிகமான தோப்புத்துறை சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர்களும் கலந்து கொண்டு புனித ரமலானின் வாழ்த்துக்களையும், மகிழ்வையும் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர்
எம். அப்துல் ரஷீத் அவர்கள் திருமறை வசனங்களை மொழிந்து நிகழ்ச்சியை துவைக்கி வைத்தார். சங்கத்தின் இணைச் செயலாளர் எம். ஜே. அவுலியா முகம்மது நிகழ்ச்சியினை முன்மொழிந்திட, செயலாளர் ஜே.பி. ஜமால் மெய்தீன் வரவேற்புரை நல்கி தொகுத்து வழங்கினார். சங்கத்தின் தலைவர் எம்.எம். ஷர்புதீன் முன்னுரை வழங்கி தலைமையேற்று நிகழ்ச்சியை நடத்தித் தந்தார்.

சிறப்பு விருந்தினராக அமீரகத் தொழில் அதிபரும், ஈமான் அமைப்பின் கல்விக்குழு தலைவருமான பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டார். அவருக்கு நினைவுப் பரிசையும், பொன்னாடையையும் அன்னை பாத்திமா பெண்கள் அரபிக் கல்லூரியின் நிர்வாகிகள் சி. பஷீர் அகமது மற்றும் ஏ.எம்.ஒய். சகாபுதீன் ஆகியோர் வழங்கினர்.
அமீரக இஸ்லாமிய அழைப்பாளர் முஹம்மது அபூதர் அவர்கள் தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார், அவருக்கு நினைவுப் பரிசையும், பொன்னாடையையும் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் எம்.ஏ. சித்திக் மற்றும் கே.எம்.எஸ். பாரூக் ஆகியோர் வழங்கினர். சங்கத்தின் துணைத் தலைவர் ஹெச். பசுல் ஹக் நன்றி கூற இஃப்தார் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications