For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மீன் பிரியரா நீங்கள் அப்போ உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, மீன் சாப்பிடும் நபர்களுக்கு வாய் புற்றுநோய், சருமபுற்றுநோய் வர வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதற்கு காரணம் மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த கொழுப்பு அமிலங்கள் இறந்த செல்களை புதுப்பிக்கின்றனவாம். சருமம் பொலிவடைகிறது என்கின்றனர் நிபுணர்கள் லண்டன் பல்கலைக்கழகம், குயின் மேரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதனை பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபித்துள்ளனர்.

ஒமேகா 3 அமிலம்

ஒமேகா 3 அமிலம்

மீன் உணவில் , கெட்ட கொழுப்பு அறவே இல்லை. புரதச் சத்து அதிகமாக உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த அமிலம் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைக்கிறது.

சருமப்புற்றுநோய்

சருமப்புற்றுநோய்

பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், "ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. சருமப்புற்றுநோய், வாய்ப்புற்றுநோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு தருகிறது.

மார்பகப்புற்றுநோய்

மார்பகப்புற்றுநோய்

மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.

இதயத்துக்கு பாதுகாப்பு

இதயத்துக்கு பாதுகாப்பு

கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.

ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எந்தவித இதயக்கோளாறுகளும் ஏற்படாது என்கின்றனர் நிபுணர்கள்.

குழந்தைகளுக்கு மீன்

குழந்தைகளுக்கு மீன்

மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.

மூளை சுறுசுறுப்பாகும்

மூளை சுறுசுறுப்பாகும்

மீன் உணவில் உள்ள "ஒமேகா 3' ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது. அதனால் , வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.

English summary
Omega-3 fatty acids, found in oily fish such as salmon and trout, selectively inhibit growth and induce cell death in early and late-stage oral and skin cancers, according to a new study.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X