துபாய், அபுதாபியில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்

துபாய் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இந்திய பாரம்பரியத்தை விளக்கும் வண்ணமும், தேசிய பக்தியினை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது.
சஞ்சய் வர்மா தனது உரையில் அமீரகம், இந்தியாவுக்கான இரு தரப்பு உறவு குறித்து பெருமிதம் தெரிவித்தார். இதற்கு முக்கிய காரணமாக இருந்து வரும் அமீரக வாழ் இந்தியர்களைப் பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தினச் செய்தியினை வாசித்தார்.
அபுதாபி
அமீரகத் தலைநகர் அபுதாபியில் இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.
பல்வேறு இந்தியப் பள்ளி மாணாக்கர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதேபோல் ஷார்ஜா, உம்முல் குவைன், அஜ்மான், ராசல் கைமா, கல்பா, அல் அய்ன், ஃபுஜைரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்திய சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
ஏமன்:
ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் இந்தியாவின் 67வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இந்திய தேசியக் கொடியினை இந்திய தூதரகத்தின் சார்ஜ் டி அஃபையர்ஸ் ஆர். வெங்கடேஷன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரை வாசிக்கப்பட்டது.
இந்திய தூதரகப் பள்ளி மாணாக்கர்கள் தேச பக்திப் பாடல்களைப் பாடினர்.
நிகழ்வில் ஏமன் நாட்டில் வாழ்ந்து வரும் இந்திய குடிமக்கள் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications