அபுதாபியில் சர்வதேச புத்தகக் கண்காட்சி: நாளை கடைசி நாள்
அபுதாபி: அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் 23வது சர்வதேச புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது.
அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் 23வது சர்வதேச புத்தகக் கண்காட்சி 24.04.2013 அன்று காலை துவக்கி வைக்கப்பட்டது. இக்கண்காட்சி அபுதாபி சுற்றுலா மற்றும் கலாச்சார நிர்வாகத்தின் சேர்மன் ஷேக் சுல்தான் பின் தஹ்னுன் அல் நஹ்யான் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
நாளை(29ம் தேதி) வரை இக்கண்காட்சி நடைபெறும். பல்வேறு துறை சார்ந்த நூல்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு 900 புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு 1025 புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இக்கண்காட்சியில் 10வது ஆண்டாக பங்கேற்கும் தமிழகத்தைச் சேர்ந்தவரால் நடத்தப்படும் அல் முத்தனபி புத்தக நிறுவனம் கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு விற்பனை சற்று அதிகரிக்கும் என இதனைக் காண ஆர்வமுடன் வரும் மக்கள் மூலம் அறிய முடிவதாக தெரிவித்துள்ளார் அதன் மேலாளர் நூருல் ஹக்.
இந்திய அரசின் தேசிய புத்தக நிறுவனம் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் இயக்குநரும் தமிழகத்தைச், சேர்ந்தவருமான சிக்கந்தர் கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இணையதளம் : www.adbookfair.com
ஃபேஸ்புக் : ADBookFair
ட்விட்டர் : ADIBF


Click it and Unblock the Notifications
