For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'மன அழுத்தமும் பாரம்பரிய சீன மருத்துவமும்': சிங்கப்பூரில் நடந்த கருத்தரங்கு

By Siva
Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் கிளையின் சார்பில் கடந்த 7ம் தேதி சிங்கப்பூரில் மருத்துவ கருத்தரங்கு நடைபெற்றது.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் கிளையின் ஏற்பாட்டில் கடந்த 7ம் தேதி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 'மன அழுத்தமும் பாரம்பரிய சீன மருத்துவமும்' என்ற தலைப்பில் மருத்துவ கருத்தரங்கு சிங்கப்பூர் மாஸ் கல்வி நிலையத்தில் நடந்தது.

JMC alumni association's seminar held in Singapore
இக்கருத்தரங்கை கணித பேராசிரியர் அமானுல்லாஹ் துவங்கி வைத்தார். சங்கத்தின் துணை தலைவர் கலந்தர் மொஹிதீன் தலைமை வகித்தார். ரிபப்ளிக் பலதுறைக்கல்லூரியின் விரிவுரையாளரும், சீன பாரம்பரிய மருத்துவ ஆலோசகருமான திரு லீ பிங் லெக் கருத்தரங்கை நடத்தினார். போஸ்டன் வணிகப் பள்ளியின் இயக்குனர் திரு. எரிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்தரங்கை நடத்திய விரிவுரையாளருக்கு நினைவுப் பரிசை வழங்கினார். சங்க செயலாளர் அப்துல் சுபஹான் நன்றி கூறினார்.

எடுக்குவஸ்ட் கல்வி கழகத்தின் இயக்குனர் இத்ரீஸ் மாலிம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். எழுத்தாளர் ஷாநவாஸ், மாஸ் கல்வி நிலையத்தின் இயக்குனர் ஹபீபுல்லாஹ், சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

English summary
Trichy Jamal Mohamed college alumni association Singapore chapter arranged for a medical seminar in Singapore on april 7.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X