அபுதாபியில் அய்மான் சங்கம் இணைந்து நடத்திய புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி
அபுதாபி: அபுதாபியில் அய்மான் சங்கம் இணைந்து நடத்திய புனித லைலத்துல் கத்ர் இரவு சிறப்பு நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் வசிக்கும் தமிழக முஸ்லிம்களை ஒன்றிணைத்து புனித லைலத்துல் கத்ர் இரவு சிறப்பு சொற்பொழிவு மற்றும் சிறப்பு தொழுகை உள்ளிட்ட அமல்கள் நடைபெற்றது.
அபுதாபி அய்மான் சங்கம், இந்தியன் முஸ்லிம் பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியை மெளலவி ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் மஹ்லரி நெறிபடுத்தினார். சமுதாயப் புரவலர் அல்ஹாஜ் நோபிள் மரைன் ஏ.ஷாஹுல் ஹமீத், பனியாஸ் நிறுவன அதிபர் நாகூர் அப்துல் ஹமீத் மரைக்காயர், திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் களமருதூர் ஹாஜி.ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை தாருல் உலூம் ஹிக்மதுல் ஃபாலிஹா அரபிக் கல்லூரி முதல்வர் மெளலவி அப்துல் ஜப்பார் பாகவி, சென்னை அல்ஹஸனாத் கல்வி மையத்தின் முதல்வர் மெளலவி எம்.அப்துல்லாஹ் பாகவி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். தராவீஹ் ,தஸ்பீஹ், தொழுகைகளை தொடர்ந்து திக்ர் மற்றும் துஆ மஜ்லிஸ் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அபுதாபியில் வசிக்கும் தமிழக முஸ்லிம்கள், பல்வேறு அமைப்புக்களின் நிர்வாகிகள் என திரளானோர் தங்களின் குடும்பத்தினருடன் பங்கேற்று சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஷர்புத்தீன் ஹாஜியார், காயல் எஸ்.எ.சி.ஹமீது, கீழக்கரை முஹம்மது ஜமாலுத்தீன், சென்னை காதர் மீரான் ஃபைஜி, லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, சித்தீக், ஆவை.அன்சாரி, அமானுல்லாஹ் ஃபைஜி, காயல்பட்டினம் துனி முஹம்மது உமர் அன்சாரி, திருவாடுதுறை அன்சாரி பாஷா உள்ளிட்ட லைலத்துல் கதர் கமிட்டி உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications