நீ ஒரு காதல் சங்கீதம்!

காதலை ஏன் சங்கீதம் என்று கூறினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சங்கீதத்தைப் போல காதலும் சுகமானது, மனசுக்கு இதமானது, தெம்பூட்டக்கூடியது, உற்சாகம் தரக் கூடியது, ஊக்கம் தரக் கூடியது என்பதில் சந்தேகமில்லை.
மேலும், சங்கீதத்தைப் போலவே காதலும் நம்மை மெய் மறக்க வைக்கும் ஒரு மாயாஜாலமாகும். இந்த மாயா சக்திக்குள் வீழாத, வீழ்ந்து மீண்டவர்கள் என்று யாருமே கிடையாது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு கட்டத்தில் இதில் விழுந்து எழுந்தவர்கள்தான்.
காதலே ஒரு அருமையான ராகம்தான். அதை மீட்டும்போது, மீட்டுகின்ற விதத்தில் அதன் அருமை புரியும், அழகும் மிளிரும்...
ஒவ்வொரு காதலும் ஆனந்த பைரவி போல, அமிர்தவர்ஷினி போல, மோகன ராகம் போல தென்றல் கலந்த தெய்வீக சுகானுபவம்தான்.
கண்மணியே காதல் என்பது
கற்பனையோ, காவியமோ கண் நிறைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் வந்து பொங்குதம்மமா... மோகனம் தரும் இந்தப் பாடல் காதலை எப்படி ரசிக்க வைக்கிறது பாருங்கள்.
அதேபோல ..
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
நினைவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை... இப்படிப் பாடினால் சொக்காத உள்ளம் உண்டா..திறக்காத மனக் கதவுதான் உண்டா.
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே... காதலன் 'குணா'வாக இருந்தாலும் அந்தக் காதலில் எத்தனை குணம் தெரிகிறது பாருங்கள். சங்கராபரணமே சொக்கிப் போகுமே இந்த வரிகளையும், அதன் வாளிப்பையும் கேட்டால். நிச்சயம் மனிதர்கள் உணர்ந்து கொள்ள முடியாத, வார்த்தைகளில் விளக்க முடியாத கவிதைதான் இந்தக் காதல்...
இன்னும் உன்னை சந்திக்கவில்லை
எங்கிருந்தாலும் என் ஆத்மா உன்னுடன்தான்
என்ன அழகு நீ...
எங்கிருந்தாய் இத்தனை காலம்
மீண்டும் மீண்டும் காதலிப்பேன்
காலத்திற்குப் பின்னும் காதலிப்பேன்
எங்கோ என் ஆன்மா போவதற்குப் பதில்
உன்னைச் சுற்றியே திரியச் சொல்வேன்
நடக்க முடியாத கால்கள்
பேச முடியாத வாய்
மெளனமே பாஷையாகிப் போன நான்
எங்கெங்கும் உன் முகம்
என்னவளே
உலகமே அழகாக இருக்கிறது
உன் முகம் மூலம் நான் பார்க்கும்போது
உன்னால்தான் இது சாத்தியம்
எடுத்துக்கொள் என்னை
கொண்டு போய் விடு என்னை
சந்தேகமே இல்லை, நிச்சயம் காதல் ஒரு சங்கீதம்தான்...!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications