இதழ் பிரித்து... இதயம் பிடித்து..!
நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி..
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி...
ஒரு படத்துக்கான பாடலாக இது இருந்தாலும் உண்மையான உணர்வுகள் எப்போதும் இப்படித்தான் நன்றி சொல்லிக் கொண்டிருக்குமாம்... நன்றி சொல்லாத உணர்வுகள் நிச்சயம் எந்த ஒரு இதயத்திலும் இருக்கவும் முடியாது.
காதலாக இருந்தாலும் சரி, காமமாக இருந்தாலும் சரி உறவுகளுக்குள் வேஷம் இருக்க முடியாது.. அப்படி இருந்தால் அது நிச்சயம் ஸ்திரமில்லாத கட்டடம் போல பொலபொலவென உதிர்ந்துதான் போகும்.
சந்தோஷ உறவுகளையும் நாம் இப்படித்தான் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள் உளவியலாளர்கள். ஒவ்வொரு உறவும் அழகாக மாறுவது, அவரவர் அணுகுமுறையைப் பொறுத்தது என்பது அவர்களின் கருத்து.
இன்ப உறவுகளை இறுக்கமாக வைத்துக் கொள்ள நிறைய வழிகள் உள்ளன.. சின்னதாக பார்ப்போமா...

அன்பான முத்தம்...
உறவுகளை எப்போதும் ஸ்திரமாகவும், சிலிர்ப்பாகவும் வைத்துக் கொள்ள இந்த முத்தம் பேருதவியாக இருக்கும்... துணையின் இதழ் பிடித்து, பிடித்திழுத்து, சின்னச் சின்னதாக அவ்வப்போது முத்தம் கொடுங்கள்.. அவரது உதடுகளைப் போலவே உறவும் அழகாக இருக்கும்.

ஒவ்வொரு முத்தத்திலும் உயிரின் சத்தம்
முத்தமிடும் ஒவ்வொரு நொடியிலும் அவரது இதயம் புகுந்து நீங்கள் புதுப் புணலாய் கொந்தளிப்பதை அவர் உணர்வார். நீ என் இதழ் தொட்டாய்.. நான் உன் இதயம் பற்றினேன் என்று அவர் கவிதை பாடுவார்.

அழகான அரவணைப்பு
அரவணைப்பை விட எந்த சந்தோஷமும் ஒருவருக்குக் கிடையாது, கிடைக்காது. சோகத்திலும் சரி, சந்தோஷத்திலும் சரி அரவணைப்பு அருமையான ஒரு மருந்தாகும்.

ஏன் கண்ணம்மா கண்ணில் துளிகள்...
துணைக்கு மனசு சரியில்லாவிட்டாலும், சோகத்தில் இருந்தாலும்.. ஆறுதலாக நாலு வார்த்தை பேசிப் பாருங்கள். அவர் அருகே நீங்கள் இல்லாவிட்டாலும் கூட இதயத்திற்கு அருகே போய் உட்கார்ந்து உங்களது வார்த்தை ஆறுதலைக் கொடுங்கள்.. நிச்சயம் அவரது மனசு லேசாகும்... கண்ண்ம்மா அழாதே.. உன் விழி நீரைத் துடைக்கத்தான் என் விரல்கள் இருக்கே என்பதை அவருக்கு உணர்த்துங்கள்..

அது மட்டுமா சந்தோஷம்...
செக்ஸ் மட்டுமே ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் சந்தோஷம் என்று பலர் நினைக்கிறார்கள்.. நிச்சயமாக கிடையாது.. உறவில் செக்ஸும் உண்டுதான்.. ஆனால் அதை விட உன்மத்தானது அன்பும், ஆதரவும், ஆறுதலும். ஒவ்வொரு உறவிலும் இந்த மூன்றும்தான் முதலிடம் பெறும்.. காமம் கடைசிதான்.

மனசு நிறைய பாசம்
மனசு நிறைய நிறைய வழிய வழிய பாசத்தைக் கொட்டுவதும் இன்னொரு முக்கிய அம்சம்... என்ன விலை கொடுத்தாலும், கிடைக்காத ஒன்று பாசம் மட்டுமே.. உண்மையான பாசத்தை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது.. அது தானாகவே சுரந்து வரும்.. தாய்ப்பாலைப் போல சுத்தமானது உண்மையான அன்பு மட்டுமே.. அது கிடைக்கப் பெறாதவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்... எனவே கிடைக்கும் அன்பைத் தவற விடாமல், தடுத்து விடாமல்.. பெற்றுக் கொள்வது உண்மையிலேயே பாக்கியமாகும்.
வாழ்க்கையின் முதல் நாள் நம்மில் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கும்.. அதேபோலத்தான் கடைசி நாளும்... இந்த இடைப்பட்ட நாட்களில் அன்பு, பாசம், காதல், கணிவு, பிரியம், இன்பம் என ஒவ்வொன்றையும் தேடித் தேடி மனிதன் அலைந்து உலைந்து போகிறான்... இத்தனையும் ஒருசேர தேடி வரும்போது அதைப் பிடித்துக் கொள்பவன்தான் புத்திசாலி, பாக்கியசாலி...
அன்பையும், பாசத்தையும், பிரியத்தையும் கொட்டிக் கொடுப்போர்தான் உண்மையிலேயே உறவுகளை ஆராதிக்கத் தெரிந்தவர்கள்.... பிறகென்ன அந்த அன்பில் நனைந்து உறவைப் பிணைப்பாக்கிக் கொள்ளுங்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications