சவூதியில் பாலை தமிழ் விழா 2013: தமிழருவி மணியனுக்கு 'செந்தமிழ் வேந்தன்' பட்டம்
சவூதி: சவூதி அரேபியா தம்மாம் நகரில் தமிழ்நாடு சமூக நல அமைப்பின் பாலை தமிழ் விழா-2013 சிறப்பாக நடந்தது.
தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. செல்வி ரஹீமா சத்தார் அவர்களின் புனித குரான் (கிராஅத்) ஓதுதலுக்கு திரு. அப்துல் சத்தார் அவர்கள் தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கினார்.
விழாவினை அமைப்பின் தலைவர் திரு. அப்துல் சத்தார் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். அமைப்பின் பொருளாளர் திரு. வெங்கடேஷ் அவர்கள் முன்னிலை வகித்தார். அமைப்பின் கலை இலக்கியப் பிரிவு பொறுப்பாளர் திரு. பரூக் ராஜா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அப்துல் சத்தார் தனது தலைமை உரையில், இந்திய தூதர் திரு. ஹாமித் அலி ராவ், தூதரக முதன்மை பொறுப்பாளர் அமைச்சர் திரு. சிபி ஜார்ஜ், தூதரக சமூக நல பிரிவின் தமிழ் அலுவலர் திரு. விவேகானந்தன் மற்றும் அதிகாரிகள் யாவரும் மிக சீரிய பணிகளை ஆற்றி வருவதாக நன்றி பாராட்டினர். கேரளா நவோதயா சமூக அமைப்பு மற்றும் கேரளா நவயுகம் சமூக அமைப்பு யாவும் தமிழ் சமூகத்துக்கும், டான்ஸ்வா(TANSWA) அமைப்புக்கும் ஆற்றிய உதவிகளை நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்தார். தாயகம் திரும்பும் இந்திய தொழிலாளர்களுக்கு தூதரகதின் சேவை பணியில் சமூக பணியாளர்கள் அனைவரும் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டது.
சவூதியில் உள்ள தங்கும் உரிமை இழந்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தங்கள் தாயகம் செல்ல பொது மன்னிப்பு வழங்கி இந்திய அரசு மற்றும் இந்திய தூதரகத்தின் கோரிக்கைகளை ஏற்று சலுகைகள் வழங்கிய சவூதி அரேபிய மன்னர் திரு. அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு சமூக நல அமைப்பு கடந்த 8 ஆண்டுகளாக ஆற்றி வரும் தமிழர் நல மனிதநேய அறப்பணிகளையும், முயற்சிகளையும், தமிழ் சமூகம் அடைந்த பலன்களையும் பொதுச் செயலாளர் திரு. சுரேஷ் பாரதி அவர்கள் தொகுத்து வழங்கினார். சவூதியில் இறந்த தமிழர்களின் பூவுடல்களை இந்திய தூதரகத்தின் உதவியுடன் தமிழகத்துக்கு அனுப்பி வைப்பது, ரியாத் இந்திய தூதரகத்தின் அனைத்து சேவை மற்றும் உதவிகளை இலவசமாக தமிழ் சமூகத்துக்கு கிடைக்க செய்வது, இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு பயிலரங்குகள் தொழிலாளர்களுக்காக நடத்துவது, இந்த நாட்டின் இறையாண்மை கோட்பாடுகளுக்கு உட்பட்டு தமிழக கல்வி மற்றும் கலாச்சார அரங்குகளை தம்மாம் இந்திய பன்னாட்டு பள்ளியில் தமிழ் அரங்கில் நடத்த உதவியது, இந்திய தினம்-2009, இந்தியா விழா-2010 மற்றும் இந்திய-பன்னாட்டு குளிர்கால விழா-2012 ஆகியவற்றில் தமிழக சுற்றுலா-கல்வி-கலாச்சார கலை அரங்குகளை அமைத்து தமிழகத்தின் பெருமைகளை உலகுக்கு கண்காட்சியாக்கியது, இந்திய பன்னாட்டு பள்ளியின் சமூக மற்றும் ஆசிரியர்களின் நலனில் அக்கறையுடன் செயல்படுவது, தமிழக மாறும் இந்திய சமூக அமைப்புகளுடன் இணைந்து மக்கள் நலப்பணி மற்றும் தமிழ் மொழிப்பணி ஆற்றி வருவதை தொகுத்தளித்தார்.
விழாவின் சிறப்பாக சவூதியின் பொதுத் தமிழ் சமூகம் நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அரவணைக்கும், தமிழருக்காக பொது வாழ்வில் நேர்மையுடன் அரசியல் அறத்துடன் மது ஒழிப்புக்காக போராடும், தமிழறிஞர் "காந்திய மக்கள் இயக்க" தலைவர் திரு. தமிழருவி மணியன் அவர்களுக்கு "செந்தமிழ் வேந்தன்" எனும் சிறப்பு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பட்டத்தின் மதிப்பு மிகு பட்டயத்தை இந்திய பன்னாட்டு பள்ளியின் நிர்வாக குழு தலைவர் பொறியாளர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் வழங்கி சிறப்பு செய்தார்.
திரு. தமிழருவி மணியன் அவர்கள் "மனித நேயம்" பற்றி சிறப்புரை ஆற்றினார். தனது ஒன்றரை மணி நேர உரையில் பார்வையாளர்களின் நெஞ்சம் உருகும்படியன கருணை, மனித நேயம், தியாகம் மற்றும் பொதுச் சேவைப் பண்புகள் குறித்த கருத்துக்களை வழங்கினார். புனித குர்ஆனில் இடம்பெற்றுள்ள கொடை மற்றும் தனம் வழங்கும் முறை பற்றிய மேற்கோள்களை அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பிரதிநிதி திரு. அப்துல் காதர், இந்தியன் ப்ரெட்டர்னிட்டி ஃபோரம் தலைவர் பாசல், கேரளா நவோதயா சமூக அமைப்பு தலைவர் திரு. இ. எம். கபீர், கேரளா நவயுகம் சமூக அமைப்பின் பிரதிநிதி சுரேஷ், தமிழ் இலக்கிய பேச்சாளர் நாஞ்சில் கபீர், தம்மாம் தமிழ் அரங்கம் தலைவர் திரு. இராமநாதன், இந்திய பன்னாட்டு பள்ளியின் மனோதத்துவ கவுன்சிலிங் துறை ஆசிரியை டாக்டர். அபர்ணா மற்றும் தம்மாம் தமிழ் அரங்கம் நிர்வாகி திரு. புண்ணிய மூர்த்தி ஆகியோர் திரு. தமிழருவி மணியன் அவர்களுக்கு மலர் செண்டு வழங்கி வாழ்த்துரை ஆற்றினார்கள்.
விழாவில் தம்மாம் பகுதியில் உள்ள தமிழ் கலை இலக்கிய மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் சபியுல்லா கான், தம்மாம் கலைக்கூடம் தலைவர் திரு. ஷாகுல் ஹமீது, முத்தமிழ் மன்ற முன்னாள் தலைவர் திரு. ஆரீப், தம்மாம் தமிழ் அரங்கம் செயலாளர் திரு. யோகேஷ் கண்ணா, தமிழ் சமூக பிரமுகர் திரு. இளங்கோ, டான்ஸ்வா நிர்வாக குழு உறுப்பினர் திரு. ராபர்ட் ஜெரோம், மதீனா நிறுவன குழும தலைவர் திரு. ஹலீம் ஆகியோர் தங்கள் ஆதரவை வழங்கினார்கள்.
டான்ஸ்வா நிர்வாகக் குழு உறுப்பினர்கள் திரு. ராஜேந்திரன், திரு. மைக்கல், திரு. ஜான், திரு. பழனி, திரு. அஜயன் வில்சன், திரு. டைட்டஸ் ஆகியோர் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு பணியினை சிறப்பாக செய்திருந்தனர். திரு. மைக்கல் அவர்கள் நன்றி உரையாற்றினார். அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. சவூதி அரேபிய நாட்டுப்பண் மற்றும் இந்திய நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவடைந்தது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications