துபையில் ரோட்டரி பயிற்சி நிறைவு விழா- ஈடிஏ அக்பர் கானுக்கு பாராட்டு
துபை: ரோட்டரி இண்டர்னேஷனல் மாவட்டம் 3212ன் சார்பாக துபைக்கு வருகை தந்திருந்த பிரதிநிதிகளின் பயிற்சி நிறைவு நாள் மற்றும் வழியனுப்பு நிகழ்வு துபை கிரீக் படகில் ஏப்ரல் 7 அன்று மாலை 8 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்வில் ரோட்டரி அமைப்பின் சார்பாக முன்னாள் கவர்னர் ஆறுமுகப் பாண்டியன் மற்றும் ரோட்டரி நடப்பு செயலாளர் பி.கே. சரவணன் ஆகியோர் ஈடியே குழுமத்தின் மனிதவள மேம்பாட்டு செயல் இயக்குநர், அக்பர்கான் அவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

அவரின் எளிமையை மேற்கோள் காட்டி பேசியவர், ஈடியேவின் சார்பாக, தென்மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை மற்றும் இராமநாதபுர மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டுவரும் நடமாடும் மருத்துவமனை திட்டத்தில் அக்பர்கானின் பணியை பாராட்டி பேசினார். மேலும் துபைக்கு வருகை தந்த தங்களை சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வை ஊட்டும் வண்ணம் தங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த நெல்லை எஸ்.எஸ்.. மீரானுக்கு நன்றியினை பதிவு செய்தார்.
பின்பு பேசிய அக்பர்கான் தன் உரையில், எல்லோரும் குறிப்பிடுவது போல ஈடியே நிறுவனம் , 70,000 குடும்பங்களுக்கு மட்டும் வாழ்வாதாரம் வழங்கவில்லை. இதுவரை சுமார் 2,50,000 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கியிருக்கிறது என்ற புள்ளி விபரத்தை பதிவு செய்தார். மனிதவள மேன்பாட்டுத்துறையில் தன் அனுவங்களை பகிர்ந்து கொண்ட அவர், கடந்த 40 வருடங்களாக ஈடியே கடந்து வந்த பாதைகளையும், எதிர் கொண்ட சவால்களையும் நினைவு கூர்ந்தார்.
இந்நிகழ்வில் ஈடியே நிர்வாக இயக்குநர் அலுவலக மேலாளர் மீரானுக்கு ரோட்டரி முன்னாள் கவர்னர் ஆறுமுகப் பாண்டியன் பொன்னாடை போர்த்த, ரோட்டரி முன்னாள் கவர்னர் முகவை தினேஷ் பாபு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

பின்பு பேசிய நெல்லை மீரான், ரோட்டரி அமைப்பிற்காக தான் செய்த மிகச் சிறிய உதவிகளை கூட பெரிதுபடுத்தி பேசும் அவர்களின் பெருந்தன்மையை வியந்ததுடன், வரும் காலங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த அமைப்பிற்கு தன் உதவி தொடரும் என்றும் உறுதியளித்தார்.
நிகழ்வில் அமீரத்தமிழர்கள் அமைப்பின் அமுதரசன், துபை காயிதேமில்லத் பேரவை கீழக்கரை ஹமீதுரஹ்மான், மற்றும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக கீழைராஸா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோட்டரி இண்டர்நேஷனல் நிர்வாகிகளுடன் இணைந்து மீரான், மற்றும் அம்பை ஸ்பர்ஜன் சுகுமார் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications