14ம் தேதி செல்லூர் திருவாப்புடையார் கோவில் கும்பாபிஷேகம்
Subscribe to Oneindia Tamil

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உபகோவில் செல்லூர் அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோவில். இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 14ம் தேதி அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் அமைச்சர்கள் செந்தூர் பாண்டியன், செல்லூர் கே. ராஜு, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி. ஜக்கையன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கின்றனர்.
இந்த விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications