அப்ப மட்டும் இனிச்சதோ: கணவன்களை கலாய்க்கும் மனைவிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கணவன்மார்களிடம் மனைவிகளுக்கு பிடிக்காத விஷயங்கள் என்னவென்று தெரியுமா?

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத விஷயங்கள் உண்டு. அதே போன்று கணவனிடம் மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள் உண்டு. இருப்பினும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு வாழ்ந்தால் தான் இல்லறம் நல்லறமாக இருக்கும்.

அப்படி மனைவிமார்களுக்கு கணவன்களிடம் பிடிக்காத விஷயங்களில் சிலவற்றை பார்ப்போம்.

கேட்கவே மாட்டீங்களா?

கேட்கவே மாட்டீங்களா?

மனைவிமார்கள் தொனத் தொனவென பேசுவது கணவன்களுக்கு பிடிக்காது. இருப்பினும் கட்டியவள் மனதை கஷ்டப்படுத்தக் கூடாது என்று அவள் பேசுவதை எல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில் விடுவர். இது மனைவிகளுக்கு பிடிக்காது. நான் பேசிக்சிட்டே இருக்கேன் நீங்கள் அதை கேட்கக் கூட மாட்டேன் என்கிறீர்கள் என்று மனைவிமார்கள் புலம்புவார்கள்.

அப்போ மட்டும் இனித்தது

அப்போ மட்டும் இனித்தது

இப்பொழுது தான் திருமணம் நிச்சயமான உடன் ஆணும், பெண்ணும் செல்போனில் பேசுகிறார்களே. இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு மனைவி கூறும் டயலாக் இது தான், அப்பொழுது மட்டும் மணிக்கணக்கில் நான் பேசுவதை கேட்பீர்கள், இப்பொழுதெல்லாம் நான் பேசுவது கசக்கிறதோ என்பது தான். காதல் திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம்.

செல்போன், லேப்டாப்

செல்போன், லேப்டாப்

கணவன்கள் பயன்படுத்தும் பொருட்களில் மனைவிகளுக்கு பிடிக்கவே பிடிக்காத 2 பொருட்கள் செல்போன், லேட்டாப். அந்த மானங்கெட்ட செல்போனிலும், லேப்டாப்பிலும் என்ன தான் இருக்குமோ, எப்பப் பார்த்தாலும் அதையே வைச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று மனைவிகள் வசை பாடுவதுண்டு.

வீடு மட்டும் நியாபகம் இருக்காது

வீடு மட்டும் நியாபகம் இருக்காது

அலுவலக வேலைகள் ஒவ்வொன்றையும் நன்றாக நினைவில் வைத்திருக்கும் ஆண்களுக்கு வீட்டு விஷயங்கள் மட்டும் நினைவில் நிற்பதில்லை. இதுவும் மனைவிகளை எரிச்சலடையச் செய்கிறது.

ஷாப்பிங் வர அழுகிறீர்களே

ஷாப்பிங் வர அழுகிறீர்களே

ஷாப்பிங் போகலாம் வாங்க என்று அழைத்தால் உங்கள் முகம் ஏன் இஞ்சி தின்ன குரங்கு போன்று மாறுகிறது என்று மனைவிமார்கள் அலுத்துக் கொள்கிறார்கள். நீ கடை, கடையா ஏறி இறங்குவதை நினைக்கையிலேயே கண்ணைக் கட்டுதே இதில் உன்னுடன் வேறு வர வேண்டுமா என்பது கணவன்களின் கதறல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+