"இறைத்தூதர் முஹம்மத்" நூல் வெளியிட்டு விழா.. துபாயில் கோலாகலம்!
துபாயில் இறைத்தூதர் முஹம்மத் நூல் வெளியிட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
துபாய்: "இறைத்தூதர் முஹம்மத் நூல் வெளியிட்டு விழா "தமிழ்ப்பிள்ளை" ஒலிநாடா அறிமுக விழாவும் துபாய் ஸம்மிட் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது.
துபாயில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் மொழி பெயர்த்த "இறைத்தூதர் முஹம்மத்" என்ற நூலின் அறிமுக விழாவும், கவிஞர் இசாக் இயக்கிய "தமிழ்ப்பிள்ளை" ஒலிநாடா அறிமுக விழாவும் துபாய் ஸம்மிட் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது

"இறைத்தூதர் முஹம்மத்" நூலை மஹ்ரூஃப் வெளியிட்டும் அரிகேசவநல்லூர் எஸ்எஸ் மீரான் நூலைப் பெற்றுக் கொண்டும் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவை ஷேக் சுலைமான் மஹ்ழரி அவர்கள் திருக்குர்ஆன் ஓதித் துவக்கி வைத்தார்.
வரவேற்புரைக்குப் பின்னர் அமீரகத் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் லியாக்கத் அலி, அன்வர் பாஷா, திருமதி. மீனா பத்மனாபன், ஹமீதுர் ரஹ்மான், ரஃபீக் சுலைமான், அஷ்ரஃப் அலி, முத்தமிழ் வளவன், ஃபாரூக் அலியார், முத்துக்குமரன், கீழை ராஜாகான், பாலாஜி , ஜியாவுதீன், சிம்மபாரதி, தாஹா, யாஸீன், திருமதி. யூசுஃபா, திருமதி.அஞ்சுகம், காரைக்குடி மஜீத், கவிஞர் கவிமதி, அகமது முகைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தமிழ்ப் பண்பலையின் நிகழ்ச்சி தொகுப்பாளர் நாகா, சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்களைக் குறித்த நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார். "இறைத்தூதர் முஹம்மத்" நூல் குறித்த அறிமுகத்தை ஜெஸிலா ரியாஸ் சிறப்புற வழங்கினார்.
தொடர்ந்து "இறைத்தூதர் முஹம்மத்" நூலை மஹ்ரூஃப் வெளியிட்டும் அரிகேசவநல்லூர் எஸ்எஸ் மீரான் நூலைப் பெற்றுக் கொண்டும் வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்த நிகழ்வில் கவிக்கோ அப்துல் ரஹ்மான், இன்குலாப், பாவலர் அறிவுமதி, கவிஞர்.மு.மேத்தா, இக்பால், கவிஞர் யுகபாரதி, கவிஞர் பழனிபாரதி, கவிஞர் இசாக் ஆகியோரின் பாடல் வரிகளில் தாஜ் நூரின் இசையில் உருவான "தமிழ்ப்பிள்ளை" இசைக்குறுந்தகட்டைப் பற்றி ஆசிப்மீரான் அறிமுகவுரை வழங்கினார்.

இசைக்குறுந்தகட்டை கவிஞர் இசாக் வெளியிட சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் பெற்றுக்கொண்டார். கவிஞர் இசாக் தன் ஏற்புரையில், அமீரகம் போன்ற நாடுகளில் உறவுகளைப் பிரிந்து உழைத்து வாழும் தொழிலாளர்களைக் குறித்த சரியான எண்ணங்களைப் பதிவு செய்வதற்காகவே இசைக் குறுந்தகடை உருவாக்கியதாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தனது ஏற்புரையை நிகழ்த்திய சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், "இறைத்தூதர் முஹம்மத்" நூலை மொழிபெயர்க்க இருபத்து மூன்று மாதங்கள் கடின உழைப்பு செய்ய வேண்டி வந்ததையும், மிகக் கடினமான ஆங்கிலப் பதங்களுக்கான வார்த்தைகளுக்காக சில சமயங்களில் மணிக்கணக்கில் காத்திருந்த அனுபவங்களையும் பார்வையாளர்கள் ரசிக்கும் வண்ணம் சுவாரஸ்யமாக எடுத்துரைத்தார்.
விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நஜ்முதீன் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை ஜெஸிலா, ஆசிப் மீரான், நஜ்முதீன் ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications