தகப்பன் குடித்த உயிர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நெல்லையில் தினேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் உலுக்கி விட்டது. உயிர் குடித்த மதுவால் மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். ஆட்சியாளர்களோ வழக்கம்போல தங்களது வேலைகளில் மூழ்கிப் போய்க் கிடக்கின்றனர்.

A tearful tribute to Nellai Dinesh

இதுகுறித்து நமது வாசகர் சுஜாதா ஜெயராமன் எழுதியுள்ள கவிதை.

சிறுவனே பொருமுகின்றதடா மனம் !
குடிக்கும் தந்தை உன் உயிரையும் குடித்தான் !
குடித்து விட்டு அவன் அடிக்கும் அடி பொறுக்காமல்
கயிற்றில் துடித்து உயிர் விட்டாயா கண்ணா !
காசு தராமல் தாயையும் உன்னையும் தவிக்க விட்டானா !
ஆசைப்பட்ட வாழ்க்கையை குடியால் நாசமாக்கி விட்டானா !
குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல்
உன் தாயின் உழைப்பில் வந்த காசையும் திருடி சென்று
போதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்து
தாயையே போட்டு போட்டு உதைத்தானா !
கதறிய தாயை கைகால் மிதித்து அவள் தலைமயிர் பற்றி இழுத்து
அவள் தாயையும் உன் தாயையும் கேடு கேட்ட சொற்களால்
தினம் தினம் காது கூசும் படி வசைபாடினானா !
படித்து மனனம் செய்யும் வேளையில் பக்கத்திலே உட்கார்ந்து
உன் சந்தேகம் தீர்க்கும் பொறுப்பில் இருக்க வேண்டிய தகப்பன்
உன் பிறப்பையே சந்தேகப்படுத்தி உன்னை வெறுப்பின் கோடிக்கு
உதைத்து தள்ளினானா உன் குடிகார தகப்பன் !
நாறி போன உன் தகப்பனின் குடி பழக்கத்தால்
ஒரு சுற்றமும் நட்பும் வீட்டு வாசல் மிதிக்காமல் போன விரக்தியா !
குடிபோதையில் குடும்ப போதையும் சேர்த்து
உன் அன்பு சகோதரியின் கையையே சேர்த்து இழுத்து
நடத்தையில் மிருகத்தையே கேவலப்படுத்தினானா !
இத்தனை கொடுமையும் ஈரெட்டு வயதுக்குள்ளே
நித்தம் நித்தம் சகிக்க முடியாமல்
வாழ்க்கையும் வேண்டாம் உயிரும் வேண்டாம் என்று
மொத்தமாய் உன்னை கொன்று போட்டு விட்டதா !
எனக்கு கொள்ளியும் போட வேண்டாம்
காரியமும் செய்ய வேண்டாம் என்று
தகப்பனுக்கு போட்ட உன் கடைசி கட்டளையின் வரிகளால்
தகப்பனால் நீ பட்ட வலி உணர முடிகிறது !
ஆனால் அவசரப்பட்டு விட்டாயே கண்ணா !
நீ தலையெடுத்து தாயையும் தங்கையையும் காப்பாய் என
கனவு கண்ட உன் குடும்பத்தின் ஆசைக்கு
ஒரேயடியாய் கொள்ளி வைத்து விட்டாயே !
உன் மரணத்தால் உன் தகப்பன் திருந்துவானா, தெரியாது !
ஆனால் உன் தாய் அனல் பட்ட புழுவாய்
வாழ்நாள் முழுக்க வருந்துவாள் இது உறுதி !
ஒன்று புரிந்திருக்கும் கண்ணா உனக்கு,
மதுக்கடையினால் மரித்து போன உயிர்கள் ஆயிரம் !
மரித்து போன குடிமகன்களால்
வேரோடு செல்லரித்து போகும் குடும்பங்கள் ஆயிரமாயிரம் !
உன் மரணம் மதுக்கடைகளை ஒரேயடியாய்
மூடி விடுமா, சந்தேகமே !
நீ ஆவியாய் வந்து மதுக்கடைகளை உடைப்பேன் என்று
கடைசியாய் கூறியது வேண்டுமானால் நடக்கலாம் !
இங்கு மதுக்கடைகளை மொத்தமாய் மூட சொல்ல
மக்களிடையே ஒற்றுமை இல்லை !
குடும்பங்களை கூட்டோடு அழிக்கும்
மதுபான கடைகளை உடைக்க ,
வேற்றுலகில் உன்னை போல் அலையும்
ஆயிரமாயிரம் ஆவிகளை கூட்டி கொள் !
அங்கு ஒற்றுமை நிச்சயம். இங்கு வெற்றியும் நிச்சயம்
மிகுந்த வேதனையில் சொல்கிறேன் கண்ணா !
கால சக்கரம் மூன்று நாட்கள் பின்னே செல்ல முடிந்தால்
உன் உயிரை முடித்து கொள்ளும் முடிவை மாற்ற ஆயிரம் மனங்கள் இங்கு கதறியபடி காத்திருக்கின்றன!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+