விவாகரத்தை குறைக்க துபாயில் நடந்த 'அகமும்..புறமும்' சிறப்பு பயிற்சி முகாம்
துபாய்: துபாயில் உள்ள கேரளா முஸ்லீம் கலாச்சார மையத்தில் அகமும் புறமும் என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

கடந்த 22ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு துபாய் கேரளா முஸ்லீம் கலாச்சார மையத்தில் அகமும் புறமும் என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆண்-பெண் புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த முகாமில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்கும் முறைகள், உடல் மற்றும் உளவியல் ரீதியாக இறைவன் நமக்கு வழங்கியுள்ள கடமைகள் மற்றும் உரிமைகளை, வாழ்வியல் பிரச்சனைகளை எதிர்நோக்கும் முறைகள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பெண் பொறியாளர் ஷாமிலா அவர்களின் தயாரிப்பில் உருவான இந்த நிகழ்ச்சியின் பாடத்திட்டங்களை, மனநல ஆலோசகர் ஹுஸைன் பாஷா அவர்கள் இந்த முகாமில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் எளிதில் புரியும்படி சிறப்பாக பயிற்சியளித்தார். கணவன்-மனைவிக்கிடையே பரஸ்பர அன்பை வளர்க்கவும், அதிகரித்து வரும் விவாகரத்துகளை குறைக்கவும் இது போன்ற நிகழ்ச்சிகள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும், மேலும் இந்நிகழ்ச்சியை பல்வேறு இடங்களிலும் நடத்த வேண்டும் எனவும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கூத்தாநல்லூர் கே.என்.ஆர். யுனிட்டி என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை அப்துல்லாஹ் சேட், பைரோஸ்கான் உள்ளிட்ட குழுவினரும், ஊடக ஒருங்கிணைப்பை பரங்கிப்பேட்டை அப்துல் ஹமீது, கீழக்கரை ஜெய்னுலாபுதீன், அக்கரை சதாம் ஹுசைன் ஆகியோரும் சிறப்பாக செய்திருந்தனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications