சென்னையில் 10ம் வகுப்பு மாணவி தீட்சணாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 10ம் வகுப்பு மாணவி தீட்சணாவின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள பாரதி வித்யாலயா உயர் நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருபவர் தீட்சணா. அவரது தந்தை டி. கிருஷ்ணா அமெரிக்காவில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ளார்.

Dhetchana's Bharatanatyam Arangetram held in Chennai

தீட்சணா அமெரிக்காவில் இருந்தபோது 8 வயதில் இருந்து பரதநாட்டியம் கற்று வருகிறார். திருமதி லட்சுமியிடம் இருந்து பரதம் கற்கத் துவங்கிய தீட்சணா 8 வயதில் அமெரிக்காவின் சான் டீகோ நகரில் தமிழ்ச் சங்கத்தினர் நடத்திய பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

Dhetchana's Bharatanatyam Arangetram held in Chennai

இந்நிலையில் தீட்சணாவின் அரங்கேற்ற நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அவர் கடந்த 5 ஆண்டுகளாக திருமதி துளசி செல்லதுரையிடம் பரதம் கற்றுக் கொண்டிருக்கிறார்.

Dhetchana's Bharatanatyam Arangetram held in Chennai

நாட்டியாலயா நடத்திய பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் தீட்சணா என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bharatanatyam Arangetram of Dhetchana, a class X student of Bharathi Vidyalaya senior secondary school was held in Chennai.
Please Wait while comments are loading...