துபாய் தமிழ்ச் சங்கத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கத்தில் காந்தி ஜெயந்தி விழா 25.10.2013 அன்று மாலை ஷார்ஜா ரயன் ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் வெகு சிறப்புற நடைபெற்றது.
காந்தி ஜெயந்தி விழாவிற்கு துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். அமீரக தேசிய கீதம், இந்திய தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்டவற்றுடன் விழா இனிதே துவங்கியது. சந்திராவின் மாணாக்கர்கள் திருக்குறளை அதன் விளக்கத்துடன் கூற செல்வி கோபிகா இன்று ஒரு தகவலைக் கூறினார்.

பொதுச் செயலாளர் ஜெகநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய துணைத் தூதரகத்தில் பணிபுரிந்து வரும் கன்சல் ராமகிருஷ்ணன் பணிமாறுதல் பெற்று செல்வதையடுத்து அவர் பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். அவர் தனது உரையில், அமீரகத் தமிழ் மக்களுக்காக துபாய் தமிழ்ச் சங்கம் ஆற்றி வரும் பணிகளைப் பாராட்டினார்.
தாயகத்திலிருந்து வருகை புரிந்த சிறப்பு விருந்தினர் முனைவர் பேராசிரியர் பீ.மு. மன்சூர் அவர்களின் தமிழ்ப் பணியினை பாராட்டி பொன்னாடை, மலர்க்கொத்து மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அவர் தனது உரையில், அமீரகத் தமிழ் மக்களை ஒருசேர சந்திக்கும் வாய்ப்பினை தந்த துபாய் தமிழ்ச் சங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் முழுமையாக தெரியாவிட்டாலும் அதற்காக முயற்சியெடுத்து மேடையில் தமிழ் மொழியில் வழங்கும் நிகழ்வுகள் மெய்சிலிர்க்க வைத்து விட்டது. தமிழகத்தின் நடன நிகழ்வுகளை ஒரு துளி இடைவெளியும் இன்றி தொடர்ந்து நடத்தி வரும் பாங்கு பாராட்டுக்குரியது. இதற்காக உழைத்திட்ட பாட்டு ஆசிரியை சந்திரா கீதாகிருஷ்ணன், நடன ஆசிரியை கவிதா பிரசன்னா உள்ளிட்ட குழுவினரைப் பாராட்டினார். அமீரகத்தில் இருப்பது போன்ற நிகழ்வினை விட தமிழகத்தில் இருப்பது போன்ற மனநிறைவினை துபாய் தமிழ்ச் சங்கம் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

சாரே ஜஹான்ஸே அச்சா, தமிழுக்கும் அமுதென்று பேர், பாருக்குள்ளே நல்ல நாடு, சாந்தி நிலவ வேண்டும், மகான் காந்தி மகான் உள்ளிட்ட பாடல்களை மாணவக் குழுவினர் பாடினர். வினாடி வினா நிகழ்வினை விஜயேந்திரனும், தெரிந்த மொழி தெரியாத வார்த்தைகள் நிகழ்வினை சந்திராவும் நடத்தினர்.
காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, பாரதியார், அன்னை தெரசா, ஜெயலலிதா, தமிழன்னை உள்ளிட்ட வேடங்களில் மாணவர்கள் தோன்றி பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.

ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் தனது ஊடகப் பணிகளுக்காக பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். பொருளாளர் கீதா கிருஷ்ணன் நன்றி கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications