துபாய் தமிழ்ச் சங்கத்தில் வாட்டிகனில் பணிபுரியும் தமிழ்ப் பேராயருக்கு வரவேற்பு
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வாட்டிகனில் பணிபுரிந்து வரும் தமிழர் அருள்பணி. சசிகுமார் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 18.09.2013 அன்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார்.
துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் மற்றும் நிறுவனப் புரவலரும், பொழுதுபோக்குத்துறை செயலாளருமான ஏ. முஹம்மது தாஹா சசிகுமாருக்கு நினைவுப் பரிசாக தமிழ்ச்சங்கத்தின் 10 ஆம் ஆண்டு விழா சிறப்பு மலரை வழங்கினர்.

சசிகுமார் தான் எழுதிய நூல் அன்பு மொழிகள் ஐந்து, மகிழ்ச்சியாக வாழ மற்றும் ஆங்கிலத்தில் எழுதிய உளவியல் நூல்களை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஜெயந்தி மாலா சுரேஷ், ஏ. முஹம்மது தாஹா, பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோருக்கு வழங்கி தனது மகிழ்வினை வெளிப்படுத்திக் கொண்டார்.
சசிகுமார் வாட்டிகன் போப் மாளிகை சீடர்களின் குடும்ப சபை குருவானவர். ஆசியாவில் இருந்து இருவர் மட்டுமே இங்குள்ளனர். இவர்களில் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். மற்றொருவர் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பது தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம்.

சசிகுமார் 1976 ஆம் ஆண்டு மே மாதம் குமரி மாவட்டத்தின் குளச்சலில் பிறந்தவர். இவரது பெற்றோர் வின்சென்ட் ஆசான், மரிய புஷ்பம் ஆவர். பள்ளிப்படிப்பினை குளச்சல் புனித மேரி மேல்நிலைப்பள்ளியிலும், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் இளநிலைப்பட்டமும், ரோமில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டமும் பெற்றார்.
உளவியலின் மீதுள்ள ஆர்வத்தால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை உளவியல் பட்டமும் பெற்றார். இதன் காரணமாக மக்களின் பிரச்சனைகளை அறிந்து அவர்களுக்கு சேவையாற்ற முடியும் எனும் நன்னோக்கத்தில் இப்படிப்பினைப் படித்தார். இதன் காரணமாக உளவியல் சார்ந்த நூல்களையும் எழுதி வருகிறார். தமிழ் மொழியில் மட்டுமல்லாது, ஆங்கிலத்திலும், ரோம் மொழியிலும் சர்வதேச தரத்திலான நூல்களை எழுதி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.
இதுவரை தமிழில் நான்கு, ஆங்கிலத்தில் மூன்று மற்றும் இத்தாலிய மொழியில் எட்டு நூல்களை எழுதியுள்ளார். தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து விடைபெற்றார்.
இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள:
https://sites.google.com/site/frsasivincent
மின்னஞ்சல்: [email protected]












Click it and Unblock the Notifications