"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் (5)
எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 5வது அத்தியாயம் இது.
"அவனுடைய குடோன் இங்கே குப்பத்துக்குப்பின்னாடி இருக்கு, அங்கேதான் தப்பு எதுவும் செய்வான்.. எடம் எனக்குத் தெரியும்.,. வாங்க ஸார்...!" கோட்டி முன்னால் நடக்க, ஈஸ்வரும், துரையும் அவனைத் தொடர்ந்தார்கள்.
சற்றே ஒதுக்குப்புறமான இடமாய் இருந்தது அந்தக்கட்டிடம். "உள்ளே வா குரல் கொடுத்து கூப்பிடு ! "
"அய்யா,,,,ஏற்கனவே எங்க ரெண்டு பேருக்குள்ளே கோஷ்டிப்பூசல் இனிமே நீங்கதான் பார்த்துக்கணும்....!"

"சரி போ......"!
ஈஸ்வரும் துரையும் கையில் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்தனர். வேலு, அவர்களைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சுற்றிலும் மூன்றே பேர், ஜீவன் ஒரு கயிறு கட்டிலில் கிடந்தான். மயக்கமாய் கூடவே இன்னொரு சிறுவனும், கையில் ஊசி குத்திய தடம், ஈஸ்வருக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. எல்லாரையும் நையப் புடைத்தான். "என்ன வேண்டுமானாலும் செய்துகொள் உன்னை உயிரோடு நான் விட்டால்தானே"-
"ஏய்?! ஏ.ஸி என்னையா அடித்துவிட்டாய் ? உனக்கு என்ன தெரியம்? நான் நினைத்தால்.... உன்னை என்ன செய்வேன் தெரியுமா ?" ஒரு மணி நேரத்திற்குள்ளே வெளியே வந்துவிடவா எந்த தடையும், இல்லாமல் ஆளுங்கட்சியே என் பக்கம்.'
"ஒரேயொரு விநாடி மட்டும் யோசித்தான் ஈஸ்வர், பிறகு துரை நாம இங்கே வந்துயிருப்பது? யாருக்கும் தெரியாது இல்லே...." அவன் இல்லை என்று தலையசைக்க, ஒரு விநாடி யோசித்தான். அவனோடு சேர்த்து மொத்தம் நான்கு பேர் கையிலிருந்த பிஸ்டலை உயர்த்தி எல்லாரையும் சுட்டான்.
"ஸார்..." துரை பதற.....!
'விடுங்க.....! துரை இவனை கூட்டிப்போய் வேஸ்ட்டா ஏன் செலவைக் கூட்டணும். இன்னைக்கு விட்டா திரும்பவும் வந்து எத்தனைப் பெற்றவங்க வயிற்றெரிச்சலைக் கொட்டிக்குவான். விடுங்க ஜனத்தொகையில் ஒரு நாலுபேர் காலி இந்தியாவிற்கு என்னால் முடிந்த சின்ன உதவி!"
"விசாரணை வருமே ஸார்....!"
"வரட்டும் பார்த்துக்கலாம் செத்தவன் ஒண்ணும் மகாத்மா இல்லை காசாசை பிடிச்ச பிசாசு தப்பிச்சுப் போகப் பார்த்தான். காலில் சுட முயன்றோம் குறி தவறிட்டுன்னு சொல்லி பைலை க்ளோஸ் பண்ணுங்க. இல்லேன்னா எண்கெளண்டர்ல போட்டதா பேசிடுவோம்." துரையும் தலையசைக்க ஜீவனை நல்ல விதமாய் வீட்டில் கொண்டு போய் சேர்த்தான்.
கணவன் மனைவி இருவரும் காலில் விழாத குறைதான். "நன்றிடா எங்க உயிரையே மீட்டுக்கொடுத்திட்டே,,,,,"
"விடுடா ஜீவன் எனக்கும் மகன் மாதிரிதானே! நான் வரேன், எத்தனையோ ரகசியமா இருந்தும் ப்ரஸுக்கு நியூஸ் போயிடுச்சு. விசாரணைக்கமிஷன் வந்தாலும் வரும் அதை கவனிக்க வேண்டும்."
"என் பொருட்டு நீ செய்த உதவிக்கு இத்தனை பெரிய கஷ்டமா ? என்ன பிரச்சனைவந்தாலும் சரி நானிருக்கேன். எங்கு வந்து சாட்சி சொல்லவும் நான்தயார்."

"முட்டாள் இது உதவி இல்லை அன்பு! அப்பறம் உங்க டிரைவர் அடையார் மருத்துவமனையில் இருக்கிறார். அவரை போய் பாருங்கள். நல்ல விசுவாசமான வேலைக்காரர்கள் கிடைப்பது ரொம்பவும் கஷ்டம்." அவன் கிளம்ப முற்படும்போது, துரை வாசலில் நின்றார்.
"ஸார்... உங்களை கமிஷனர் வரச்சொன்னார்..."
"வருகிறேன் ..." எத்தனை சொல்லியும் கேட்காமல் அவன் கூடவே வித்யாவும், கவினும் கிளம்பினார்கள். கமிஷனர் அலுவலகத்தில் ஒரு விறைப்பான சல்யூட்டை வழங்கி அவர் காட்டிய இருக்கையில் நன்றி சொல்லி அமர்ந்தான் ஈஸ்வர்.
"அந்த வேலுக்கு அரசியல் செல்வாக்கு நிறைய உண்டு. ஈஸ்வர் மேலேயிருந்து ஒரே பிரஷர். கேஸ் எதுவும் இல்லாமல் எப்.ஐ.ஆர் போடாமல் எப்படி அவனை நீங்க எண்கெளண்டர் பண்ணலாம் என்று கேட்டு துளைக்கிறாங்க?"
"ஸார் கடந்த சில வருடங்களாவே சிலகும்பல் பள்ளி குழந்தைகளை கடத்தி மிரட்டி பணம் பறிப்பது நடந்து வருகிறது... பணம் தரலைன்னாலோ அல்லது போலீஸ்க்கு சொன்னாலோ குழந்தையைக் கொல்வதுன்னு வன்முறையில் ஈடுபடறாங்க.... இது என் நண்பன் கவின் இவர் குழந்தையைத்தான் கடத்தினாங்க.... அவன் பிஞ்சுக் கையில் எத்தனை மயக்கமருந்து போடப்பட்ட தடயங்கள் இருக்குத் தெரியுமா ? அதில் இந்த வேலுவும் ஒரு ஆள் என்பது ஒரு ரூமராகவே இருந்தது."
"இன்பார்மர் யாரு ? கடத்தலை நேரில் பார்த்த சாட்சி இருக்கா...?"
"கோட்டி பாஸ்கர் இருவருக்கும் ஏதோ கோஷ்டி பூசல் அவன் எல்லாத்தையும் சொல்லி விட்டான். கடத்தலை இவரோட டிரைவர் நோ¢ல் பார்த்து இருக்கார். அவர் சொன்ன அடையாளங்களை வச்சித்தான் நான் வேலுவை பிடிக்க சென்றேன். போன இடத்திலே எங்களை தாக்கிட வந்தாங்க வேறு வழியில்லாம சுட வேண்டியதாகப் போச்சு....!"
"அரெஸ்ட் பண்ணிக் கொண்டு வந்து இருக்கலாம் ஈஸ்வர்."
"முயற்சி பண்ணினேன் ரொம்பவும் திமிரா பேசினான் , வேறு வழியில்லாமதான் சுட்டேன்."
கவின் வாய் திறந்தான். 'ஸார்.. என் குழந்தையை கடத்திட்டுபோய்... அவனை பார்ப்போமான்னு ஆயிடுச்சு அந்த நேரத்தில் ஈஸ்வர் மட்டும் உதவலேன்னா என் பிள்ளையை நான் பார்த்து இருக்கவே முடியாது... ! நானும் சொசைட்டியில் பெரிய ஆளுதான்... எனக்கு அரசியலில் ஆட்களைத் தெரியும். என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கறேன். ஒரு போலீஸ் அதிகாரியா அவர் தன் கடமையைத்தான் செய்து இருக்கார்."
(தொடரும்)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications