துபாயில் மீலாது நபி விழா கொண்டாட்டம்
துபாய்: துபாய் அத்தரீகத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 34ம் ஆண்டு மீலாதுன்னபி பெருவிழா நிகழ்ச்சியை கடந்த 31ம் தேதி மாலை நடத்தியது.
இந்த நிகழ்ச்சி துபாய் லேண்ட்மார்க் விடுதியில், கலீபா நிர்வாகத் தலைவர் ஏ.பி. சகாபுதீன் பி.இ., எம்.பி.ஏ. ஹக்கியுல்காதிரி தலைமையில் மௌலானாமார்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இறை வசனங்களை ஓதி மௌலவி அப்துல் ஹமீது விழாவை துவக்கி வைக்க, அதைத் தொடர்ந்து ஹுவல் வுஜூத் பாடலை மதுக்கூர் முஹம்மது தாவூது பாட அதன் தமிழாக்கத்தை அபுல்பசர் வாசித்தார். நபிப்புகழ் பாடலை மதுக்கூர் ஹாஜா முகைதீன் பாடினார். இணை பொதுச் செயலாளர் கிளியனூர் இஸ்மத் வரவேற்புரை நிகழ்த்த, சையது அலி மௌலானா, முஹிப்புல்உலமா கீழக்கரை முஹம்மது மஃரூப் மற்றும் மௌலவி முஹம்மது அலி பிலாலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இவர்களைத் தொடர்ந்து முஹம்மது ஹனீப் ரஜா காதிரி பீஜாப்பூர் தனது வசீகரமான குரலில் நபிகள் நாயகத்தை புகழ்ந்து பாடிய கஸிதா உருது பாடல்களும், பெங்களூருவைச் சேர்ந்த முஹம்மது நபீல் பாடிய தமிழ் கஸிதா பாடல்களும் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது. சிறப்பு சொற்பொழிவை மௌலவி அல்ஹாபிழ் எஸ்.எம்.எஸ். ஹுசைன் மக்கீ மஹ்லரி நிகழ்த்தினார்.
நான்காம் ஆண்டாக மீலாதுன்னபி ஆன்லைன் கேள்வி பதில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அபுதாபி மௌலிது கமிட்டியில் இருந்து நாகூர் முஸம்மில், ஈமான் அமைப்பில் இருந்து எஸ்.எம். பாரூக், காயிதே மில்லத் பேரவையில் இருந்து ஹமீதுர் ரஹ்மான், ஸுன்னத் ஜமாஅத் பேரவை அப்துல் கஃபூர், காயல்பட்டினம், லால்பேட்டை, நெடுங்குளம் ஜமாஅத்தார்கள், பத்ரு சஹாபாக்கள் இல்லத்து நண்பர்கள், மற்றும் பெரும் திரளில் தமிழர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் நூருல் அமீன், அதிரை அப்துல் ரகுமான், அகமது இம்தாதுல்லா ஆகியோர் ஆன்லைனில் நேரடி ஒளிப்பரப்பு செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மதுக்கூர் ஹாதம் அப்துல் குத்தூஸ், அபுல்பசர், முகம்மது தாவூது, மதார்ஷா, சாகுல் ஹமீது, அதிரை ஷர்புதீன், ஓ.பி.யூ பஷீர், கோட்டைகுப்பம் முகைதீன், அலிஅக்பர், மன்னை அப்துல் மாலிக், பஷிருல்லா, அமீர்அலி, மதுக்கூர் அப்துல் ரகுமான், மன்னை ஷேக்தாவூது, ஹிதாயத்துல்லா, கிளியனூர் இஸ்மத் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிறைவாக மதுக்கூர் அமீர்அலி நன்றி உரை நிகழ்த்தினார் யா நபீ சலாம் அலைக்கும் யா ரசூல் ஸலாம் அலைக்கும் பைத்துடன் இனிதே நிகழ்ச்சி நிறைவடைந்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications