அபுதாபியில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் இஸ்லாமிய திருமண சட்ட விளக்க கருத்தரங்கம்

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் "இஸ்லாமிய திருமண சட்டம் மற்றும் எம்.எஸ்.எப். மாநில மாநாடு விளக்க கருத்தரங்கம்" கடந்த 19ம் தேதி அபுதாபியில் உள்ள அல் இபுராஹிம் ரெஸ்டாரென்ட் கான்பரன்ஸ் ஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி அவர்கள் தலைமை வகித்தார்.

மௌலவி ரசீத் அஹமது பாஜில். மன்பஈ அவர்களின் கிராத்துடன் துவங்கிய கூட்டத்தில் அபுதாபி மண்டல செயலாளர் அதிரை ஏ.சாகுல் ஹமீது வரவேற்புரையாற்றினார்.

திட்டச்சேரி ஜாபர் சாதிக் பைஜி துவக்கவுரையாற்றிய பின் தமிழ் சங்க நிர்வாகி அதிரை காதர் முஹைதீன், சென்னை காதர் மீரான் பைஜி, அய்மான் சங்க பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது, ஐஎம்எப் தலைவர் அப்துல் காதர், பாரதி நட்பு கூட்டமைபின் கலீல் ரஹ்மான், காயல் ஹுசைன் மக்கி ஆலிம், மௌலவி நூருல்லா பைஜி, அல்ஹாஜ் பனியாஸ் அப்துல் ஹமீத் மரைக்காயர் ஆகியோர் கருத்துரை வழங்கினர் .

கவியன்பன் கலாம் அவர் இயற்றிய கவிதையை வாசித்தார்.

கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.கே.எம். ஹபிபுல்லா எம்.எஸ்.எப். மாநாட்டின் நோக்கம் குறித்து உரையாற்றிய பின் துணைத் தலைவர் களமருதூர் சம்சுதீன் ஹாஜியார், துணைத் தலைவர் வழக்கறிஞர் இஜாஜ் பெய்க், புரவலர் நோபிள் மெரைன் அல்ஹாஜ் சாகுல் ஹமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மணிச்சுடர் நாளிதழ் சார்பில் வெளிவந்துள்ள 26வது ஆண்டு மலர் முதல் பிரதியை நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் வெளியிட சமுதாயப் புரவலர் நோபிள் மரைன் ஷாஹுல் ஹமீத் பெற்றுக் கொண்டார். இரண்டாவது பிரதியை குத்தாலம் லியாகத் அலி வெளியிட பனியாஸ் நிறுவன அதிபர் அப்துல் ஹமீத் மரைக்காயர் பெற்றுக் கொண்டார்.

காயிதே மில்லத் பேரவையில் தன்னை இணைத்துக் கொண்ட கீழக்கரை ஹமீத் சமத் ஃபத்தாஹ்விற்கு பேரவை உறுப்பினர் அட்டையை அப்துல் ரஹ்மான் எம்.பி. வழங்கினார்.

தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாகத் அலி, பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் எஸ். முஹம்மது தாஹா, பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீது ரஹ்மான் ஆகியோர் இன்றைய காலகட்டத்தில் எம்.எஸ்.எப். மாநாட்டின் இன்றியமையாத நிலை குறித்தும், தமிழகம் முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்று வரும் இஸ்லாமிய சட்ட விளக்க கருத்தரங்குகளின் நோக்கம் குறித்தும் சிறப்புரையாற்றினர். பின் காயிதே மில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்கள் நிறைவுப் பேருரை நிகழ்த்தினார் .

MSF conference held in Abu Dhabi

அவர் தமது உரையில்:

25 ஆண்டுகளுக்கு மேலாக அமீரகத்தில் நான் பணியாற்றியுள்ளதால், உங்களின் மன ஓட்டங்களை, ஆவல்களை நான் மிக அறிந்தவனாக உங்கள் மத்தியிலே நின்று கொண்டிருக்கின்றேன். தாயகத்திலே பல சவால்களை எதிர்நோக்கி இக்கட்டான காலகட்டத்தில் நம் சமுதாயம் இருப்பதை நான் இந்தியா முழுவதும் சென்று வருவதன் மூலம் அறிந்து கொண்டுள்ளேன்.

நம் சமுதாயத்தின் இஜ்ஜத்தை, மானம் மரியாதையை கேள்விக்குறியாக்கும் வகையில் செய்யப்படும் சதி வேலைகள் சம்பந்தமாக விழிப்புணர்வு இல்லாத சமுதாயமாக நம் சமுதாயம் இருப்பது மிக வேதனைக்குரிய விஷயமாகும். தமிழகத்தில் நம் சமுதாய மக்கள் கிராமம் முதல் பெருநகரம் வரை "முஹல்லா ஜமாஅத்" கட்டுக்கோப்புடன், நம் சமுதாய கலாச்சாரத்தை பேணி வாழ்ந்து வந்தோம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் பெருநகரம் முதல் குக்கிராமம் வரை ஜமாஅத் கட்டுக்கோப்புக்கு சவால்விடும் வகையில் போட்டி ஜமாத்துகள் உருவாக்கி ஒருவருக்கொருவர் எதிரியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூழல் உருவாகியுள்ளது மிக வேதனைக்குரிய விஷயமாகும்.

ஜமாஅத் ஒற்றுமையை குலைப்பது, மார்க்க விஷயங்களில் ஒருவருக்கொருவர் பகிரங்கமாக போட்டி போட்டுக்கொண்டு சவால்விடும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு சண்டையிடுவதன் மூலம் நமக்கு வெளியில் உள்ள எதிரிகளுக்கு வேலையில்லாமல் ஆகிவிட்டது; நம் சமுதாயத்தை பார்த்து பிறர் எள்ளி நகையாடும் நிலை உருவாகியுள்ளதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

முஹல்லா ஜமாஅத் ஒற்றுமையினை குலைப்பதன் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனால் நம் சமுதாயம் சந்திக்கும் சவால்கள் குறித்தும் நாடெங்கிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எச்சரித்து வருகின்றது .

சமுதாயத்தின் இஜ்ஜத்தினை, கண்ணியத்தை காக்கும் பணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்றுமே முன்னிற்கும். சமுதாயத் தலைவர் பேராசிரியர் பெருந்தகை கே.எம்.காதிர் மொஹிதீன் அவர்களிடம் ஒரு சமயம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, சமுதாயத்தின் இஜ்ஜத்தினை, மரியாதையை கெடுக்கும் வகையில் முஹல்லா ஜமாஅத் ஒற்றுமையை குலைக்கும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகியோ, உறுப்பினரோ அல்லது வேறு எவரோ செயல்பட்டாலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஹல்லா ஜமாஅத் கட்டுக்கோப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு எதிராக செயல்படுவோரை அப்புறப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்றார்.

அந்த அடிப்படையில் இங்கு வந்திருக்கும் அனைத்து ஊர் ஜமாஅத் பிரமுகர்களும் அவரவர் ஊர் முஹல்லா ஜமாஅத் ஒற்றுமைக்கு தங்களால் இயன்ற அளவிற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, எதிர்வரும் அக்டோபர் 5ம் தேதி சென்னை பெரியார் திடலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாணவர் அணியான முஸ்லிம் மாணவர் பேரவையின் 2 - ஆவது மாநில மாநாட்டில் உங்கள் பகுதியின் மாணவர்களை, இளைஞர்களை அதிகளவில் பங்கு பெறச் செய்ய வேண்டும்.

நம் சமுதாய மாணவர்கள், இளைஞர்கள் பாதுகாப்புடனும், ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு முஸ்லிம் மாணவர் பேரவை மாநாடு வழிக்காட்டியாக அமையும், அந்தவகையில் எதிர்கால நம் சமுதாய தலைமுறையினருக்கு பயனுள்ள வழியை நாம் காண்பித்த நன்மையை அடையும் வகையில் அந்த மாநாட்டிற்கு உங்கள் முழு ஒத்துழைப்பையும் நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு எனது உரையை நிறைவு செய்கிறேன் என்றார்.

அமீரக காயிதே மில்லத் பேரவை அபுதாபி மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் ஆவை. ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி நன்றி கூற அய்மான் சங்கத்தின் மார்க்கத்துறை செயலாளர் மெளலவி ஷர்புத்தீன் மன்பஈ துஆ உடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

நிக்சச்சிக்கான ஏற்பாடுகளை அமீரக காயிதே மில்லத் பேரவையின் அபுதாபி மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சிகளை பேரவையின் அமைப்பு செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் தொகுத்து வழங்கினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+