மஸ்கட்டில் நாளை நவராத்திரி பூஜை சிறப்பு நிகழ்ச்சி
மஸ்கட்: மஸ்கட்டில் நாளை (10.10.2015) ஸ்ரீகிருஷ்ணன் கோவில் அரங்கத்தில் நவராத்திரி பூஜை சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
காலை 8 மணிக்கு நவராத்திரி பூஜை நடக்கிறது. ஸ்ரீவிஜயகுமார் குருஜி குழுவினர் வேத பாராயணம் வழங்குகின்றனர். அதனைத் தொடர்ந்து 108 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு சென்னையைச் சேர்ந்த கலைமாமணி வீரமணி ராஜு குழுவினர் வழங்கும் அம்மன் பாடல்கள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இரவு 9 மணிக்கு பிரசாதம் வழங்கப்படும். வீரமணி ராஜு சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலின் ஆஸ்தான வித்வானாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பூஜையின் காரணமாக அனைவரும் சிறப்பான உடல்நலத்துடனும், வசதிகளுடன் திகழ முடியும் என்பது நம்பிக்கையாகும்.
இந்த நவராத்திரி பூஜைக்கான ஏற்பாடுகளை அபுகாதிம் நிறுவனத்தின் பொது மேலாளர் வெங்கடேஷ், மெர்க் செரனோ நிறுவனத்தின் சுரேஷ் குமார் மற்றும் பக்தகோடிகள் செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications