வெங்காயம் விக்கிற விலையில இதுவேறயா?
சென்னை: வெங்காயம் இல்லாமல் சமையலா? சான்ஸே இல்லை என்பார்கள் பெண்கள். ஏனெனில் குழம்பு, கூட்டு, பொறியல் என அனைத்திலும் ஒரு கைபிடி அளவு வெங்காயம் போட்டால்தான் சுவையே.
ஆனால் இன்றைக்கு வெங்காயத்தின் விலையே உச்சத்தில் இருக்கிறது. கிலோ ரூ.100 கொடுத்து வாங்கி அதை வழக்கமான அளவில் பயன்படுத்த முடியாமல் திண்டாடுகின்றனர்.
சமையலில் வெங்காயம் பயன்படுத்தப்படுவது இன்றைய நேற்றைய சமாச்சாரமில்லை... கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெங்காயத்தை பயிரிட்டு சமைத்து சாப்பிட்டு வந்திருக்கின்றனர். காரணம் அதன் நன்மைகள்தான்.
பண்டைய ரோம, கிரேக்க, எகிப்து, இந்திய, சுமேரிய,சீனர்கள் வெங்காயத்தை பயன்படுத்தியத்தற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

அப்படி என்னதான் இருக்கு?
வெங்காயத்தில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. அவை நம் உடலுக்கு ரொம்ப நல்லது.

இயற்கை வயக்ரா
நம் ஊர் சித்த மருத்துவத்தில் முருங்கைக்காய்யை விட வெங்காயம் அதிகளவில் பாலியல் உணர்வு தூண்டும் சக்தியுள்ளது. அதனால் தான், விரதம் இருப்பவர்களும், துறவிகளும் உணவில் வெங்காயத்தை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் அதற்கு காரணம், பாலியல் உணர்வை தூண்டிவிடும் என்பதால் தான். அதனால் அந்த வெங்காயம் இயற்கை வயாக்கரா என வர்ணிக்கப்படுகிறது.

குதிரை பலம் கிடைக்கும்
வெங்காயத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் குதிரை பலம் கிடைக்கும் என ஈரானில் நடைபெற்ற மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதற்கு காரணம் வெங்காயத்தில் உள்ள செலினியம் என்னும் தாது உப்புதானாம்.

செக்ஸ் ஹார்மோன்
செலினியம் உப்பு ஆண்களின் ஆன்டிஆக்ஸிடென்சும் என்ற ஹார்மேனை அதிகமாக்கி டென்டோஸ்டிரான் என்ற ஹார்மேன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இதனால் செக்ஸ் உணர்வு அதிகமாக தூண்டப்பட்டு ஜோடியோடு நீண்ட நேரம் உறவு கொள்ளவும் இருவருக்குள் ஹார்மோன் உற்பத்தியையும் அதிகப்படுத்துகிறது. இதனால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கும் குழந்தை பேறு கிடைக்கும் என்கிறது அவ்வறிக்கை.

வெங்காய ஜூஸ்
இதனால் ஈரானியர்கள், எகிப்தியர்களும் பல ஆண்டுகளாகவே வெங்காய ஜீஸ் குடித்து குதுகலமாக தங்களது பெட்ரூம் வாழ்வை அமைத்துக்கொள்கிறார்களாம்.

கிளர்ச்சி அதிகரிக்க
இஞ்சி சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் வெங்காயச் சாறு சேர்த்து ஒரு நாளுக்கு மூன்று முறை எடுத்துக் கொண்டால், லிபிடோ மற்றும் பாலியல் உணர்ச்சியானது அதிகரிக்க தொடங்கி, செக்ஸ் வாழ்க்கை சீராக இருக்கும்.

புத்துணர்ச்சி கிடைக்கும்
பசியுணர்வு இல்லாதவர்கள் வெங்காயத்தை உண்பதால் பசி உணர்வு தூண் டப்பட்டு, உடலின் அழற்சி நீக்கப்பட்டு, உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி அளிக்கப்படுகின்றது. வெங்காயத்தில்

இதயம் பலமடையும்
வெங்காயம் ரத்த சிவப்பணுக்களை சுத்திகரித்து, ரத்த அழுத்தத்தை போக்கி, ஆரோக்கியமாக வாழ வழி செய்கின்றது. முக்கியமாக இதய நோய் மற்றும் மற்ற இதயம் சார்ந்த கோளாறுகளை தடுக்கின்றது

கிருமிகளைக் கொல்லும்
வெங்காயம் பெரும்பாலும் பல் சிதைவு மற்றும் வாய் நோயை தடுக்க பயன்படுத்தப்படுகிறது. அதிலும் 2-3 நிமிடங்கள் வெங்காயத்தை வாயில் போட்டு மெல்லுவதால், வாய் கிருமிகளை அழிக்க முடியும்.

புற்றுநோய் தடுப்பு
வெங்காயத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு.

இருமல் ஓடிவிடும்
வெங்காயம் கடுமையான இருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது. அதிலும் வெங்காயச்சாறு மற்றும் தேன் கலவையை சம அளவில் எடுத்துக் கொண்டு சாப்பிட்டால், தொண்டை புண் மற்றும் இருமல் குணமடையும்.

ஆஸ்துமா குணமடையும்
ஆஸ்துமா ஏற்படுத்தக் கூடிய பயோகெமிக்கல் அமைப்பை போக்குவதில் வெங்காயம் பெரும் பங்கு வகிக்கின்றது. எனவே ஆஸ்துமா நோயாளிகள் வெங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. இவை கபம் உருவாகாமல் தடுக்க உதவுகிறது.

விஷக்கடிக்கு
விஷப்பூச்சி கடித்த இடத்திற்கு வெங்காய சாறு சிறந்த நிவாரணத்தைத் தரும். அதிலும் தேனீ கடி மற்றும் மற்ற விஷக்கடிகளுக்கு, இதனை பூசி வந்தால், வலி காணாமல் போகும்.

வயிறு வலி
வெங்காயம் வயிறு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வளிக்கும். காரணம் இதில் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும், ஆன்டிபாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், வெங்காயத்தை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்கின்றனர்.

விலை கூடிப்போச்சே
இன்றைய சூழ்நிலையில் வெங்காயத்தின் விலை அதிகம்தான். அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதற்காக மருத்துவ குணம் கொண்ட வெங்காயத்தை சமையலில் தவிர்க்காமல் பயன்படுத்துங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications