குவைத்தில் அண்ணா பிறந்தநாள், ஆசிரியர் தின சிறப்புக் கூட்டம்: பாவேந்தர் கழகம் ஏற்பாடு
குவைத்: பாவேந்தர் கழகம் நடத்திய களம் பனிரெண்டு அண்ணா பிறந்தநாள் மற்றும் ஆசிரியர் தின சிறப்புக் களமாக கடந்த 6ம் தேதி காலை 9 மணிக்கு மங்காப் பாவேந்தர் அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
குவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.பழனிக்குமார் அவர்கள் தலைமையேற்க, திரு.கவிசேய் சேகர் முன்னிலை வகிக்க நிகழ்ச்சியினை திரு. ரமேஷ் குமார் தொகுத்து வழங்கினார்.
தமிழ் வணங்கு நிகழ்ச்சியில் செல்வி. ஜெயபார்வதி, செல்வி. அனுசெளந்தர்யா ஆகியோர் பாடினர். குறளோடு உறவாடுவில் திருமதி. நாகதேவந்தி, களப்பாடலில் செல்வி. ஜெயபார்வதி, கதைகேளு கனியாகு நிகழ்ச்சியில் திருமதி. லாவண்யா, நினைந்து நினைந்து என்ற நிகழ்ச்சியில் டாக்டர். இராதாகிருஷ்ணன் பற்றி திரு.சொக்கலிங்கம், மண்ணிசையில் திரு.முருகேசன், திரு. வின்சென்ட், செல்வி.ஜெயபார்வதி ஆகியோர் பங்கு பெற்று பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து நடந்த களத்துமேடு நிகழ்ச்சியில் சிறுவர்கள் சுபஸ்ரீ, சஞ்சீவ், ஆகியோர் கலந்து கொண்டு தங்களது திறைமைகளை வெளிப்படுத்தி அனைவரது கைதட்டல்களை பெற்றனர். இம்மாதம் பிறந்தநாள் மற்றும் திருமணநாள் காணும் கழக உறுப்பினர்களுக்கு வாழ்த்தினையும், கொடையாளர்களுக்கு நன்றியினையும் திருமதி. தேவி ரவி தெரிவித்தார். திரு,கிருஷ்ணமூர்த்தி, திரு. கவிசேய் சேகர் அவர்கள் கவிதை படைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து திரு.சேந்தை இரவீந்தர் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து திரு. இராஜசேகர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திருமதி. இராஜாத்தி ரமேஷ் அவர்களுக்கு திருமதி அகிலா பழனிக்குமார் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். சிறப்பு விருந்தினர் திரு. பழனிக்குமார் அவர்கள் பாவேந்தர் கழகத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கூர்ந்து கவனித்து ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சுட்டிக்காட்டி பாராட்டி பேசியது பெருமை கொள்ளச் செய்தது.
பின்னர் நடந்த கவிதைச் சிறகு நிகழ்ச்சியில் சமூக சாக்காடே போ... போ... என்ற தலைப்பில் திரு.முனு. சிவசங்கரன் அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. திரு.சுப்பிரமணி, திரு.மகேஷ், திரு.தண்டாயுதபாணி, திரு.அப்தாகீர் ஆகியோர் மனதை தொடும் கவிதைகள் படித்து மெய்சிலிர்க்க வைத்தார்கள்.

இனிதினும் இனிது நிகழ்ச்சியில் சிந்தை திறந்த தந்தை பெரியார் என்ற தலைப்பில் திரு.நடராஜன் அவர்களும், பாலை நிலத்தில் பாவேந்தர் கழகம் என்ற தலைப்பில் திரு.ப.சேகர் அவர்களும், பஞ்சாப் சிங்கம் பகத்சிங் என்ற தலைப்பில் திரு. இராஜசேகரன் அவர்களும், அணையா விளக்கு அறிஞர் அண்ணா என்ற தலைப்பில் திரு.இராவணன் அவர்களும் சிறப்பாக உரையாற்றினார்கள்.
சொல்வோம் வெல்வோம் நிகழ்ச்சியை திரு.மணிவண்ணன் அவர்கள் நடத்த பரிசினை திரு.கவிசேய் சேகர் அவர்கள் பெற்றார். வாழிய செந்தமிழுடன் களம் நிறைவடைந்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications