சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவில்
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது சோழவந்தானில் அமைந்துள்ள அருள்மிகு ஜெனகை நாராயண பெருமாள் திருக்கோயில் ஆகும். ஸ்ரீமன் நாராயணனே மாப்பிள்ளையாக வேண்டி ஜனகர் தவம் இருந்த பெருமை வாய்ந்த தலம் ஆகும்.
திருக்கோயிலின் சிறப்பம்சங்கள்:
அர்த்தமண்டபத்தின் வலது புறம் தனிச் சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீமன் நாராயணனே மாப்பிள்ளையாக வேண்டி ஜனகர் தவம் இருந்த தலம் ஆகும்.பெரிய அளவிலான இராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரது வார்ப்பு விக்கிரகங்கள் அமையப் பெற்றுள்ளது.

இத்தலத்திலுள்ள ஜெயவீர ஆஞ்சநேயரை வடைமாலை சாற்றி வணங்கி விட்டு எந்த காரியத்தை தொட்டாலும் அந்த காரியம் எந்தவித இடையூறும் இல்லாமல் வெற்றியடைகிறது என்பதால் ஜெயவீர ஆஞ்சநேயர் என்று பெயர் பெற்றுள்ளார். ஆஞ்சநேயரின் வாலின் நுனியில் மணி கட்டியிருக்கும்.
தல வரலாறு:
புராதான காலத்தில் இருந்து புகழ் பெற்ற கோயில் இதுவாகும். ஜனகரின் மகள் சீதையாக மகாலட்சுமியே பிறந்து பெருமை சேர்த்தாள். மகரிஷியான ஜனகருக்கு தம்மிடம் வளரும் குழந்தை யார் என்று உணர முடிந்தது. மகாலட்சுமியை யாருக்கு மணம் முடிப்பது என்று பெரிய குழப்பமாக இருந்தது.
இதற்காக ஸ்ரீமன் நாராயணனே பிறப்பெடுத்து வந்தால் தன் பாரம் நீங்கும் என்று எண்ணி சோழவந்தானில் வந்து தவமிருந்தார். இந்த நிகழ்வே இத்திருக்கோயிலுக்கு ஜெனகை நாராயணப் பெருமாள் கோயில் என பெயர் வர காரணமாக அமைந்தது.
ஜனகர் செய்த தவப்பயனால் ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக அவதரித்து சீதையை கரம் பிடித்தார்.
திருக்கல்யாணம்
இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில், பங்குனி பிரமோத்ஸவ திருவிழா நடைபெறுகிறது. இந்த சமயத்தில் நடைபெறும் திருக்கல்யாணம் சிறப்பு வாய்ந்ததாகும்.
திருக்கோயிலின் அமைவிடம்:
சோழவந்தான் நகரின் மையப்பகுதியில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி நகரப் பேருந்துகள் உள்ளன.
மூலவர்- நாராயணன்
தேவியர்- ஸ்ரீதேவிபூதேவி
தாயார்- ஜெனகைவல்லி
தனிசன்னதி- ஆண்டாள்
சிறப்பு- ஜெயவீர ஆஞ்சநேயர்
ஆகமம்- பாஞ்சராத்ர
சம்பிரதாயம்- தென்கலை
புராண பெயர்- ஜனகையம்பதி
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications