இனிதே நடந்த தெற்கு ஆஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் 33 ஆவது வருடாந்திர இரவு விருந்து!
சிட்னி: தெற்கு ஆஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் 33 ஆவது வருடாந்திர இரவு விருந்து நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை அன்று குட்வூட் சமுக மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மதிப்புக்குரிய பல்லின கலாச்சார அமைச்சர், சோய் பெட்டிசன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
விளம்பர அனுசரணையின் மூலமும், நல்லுள்ளங்களின் நன்கொடை மூலமும், உள்ளூர் எழுத்தாளர் ராஜி வல்லிபுரநாதன் அவர்களின் "நிலவே என்னிடம் மயங்காதே" நூல் வெளியீட்டின் மூலமும் ஒரு கணிசமான தொகை, இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்பட்டது.

வன்னியின் கண்ணீர்...
இந்த நிகழ்ச்சியில் சோமநாதன், "வன்னியின் கண்ணீர்" அமைப்பினூடாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாழ்வாதார திட்டங்கள் பற்றியும், உதவி பெற்ற மக்களின் வாழ்வாதாரம் எவ்வாறு மேம் பட்டுள்ளது பற்றியும், ஒளிப்பதிவு மூலம் விளக்கமளித்தார்.

அதிக நிதி...
"இணைவோம்!, பகிர்வோம்!!, உயர்வோம்!!!" என்ற சுலோகத்துடன், ஒருங்கிணைப்பு குழுவினரின் அயராது முயற்சியின் மூலம் எதிர்பார்க்கப்பட தொகையை விட அதிகமாக நிதி சேர்க்கப்பட்டது.

வெற்றிக்குக் காரணம்...
தொடர்ச்சியான அறிக்கைகள் மற்றும் நிகழ்வு பற்றி அங்கத்தவர்களுக்கு அளிக்கப்பட்ட விளக்கங்களே இந்த வெற்றிக்கு காரணம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவினரின் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் மெல்லிசையுடனும், அறுசுவை உணவுடனும் பரிமாறப்பட்டது.

வன்னி மக்களுக்காக...
இந்நிகழ்வின் மூலம் திரட்டப்பட நிதி முழுவதும் வன்னி மக்களின் வாழ்வாதார திட்டங்களுக்காக "வன்னியின் கண்ணீர்" அமைப்பின் ஊடாக வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications