Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன் .. மத்திய அமைச்சர் சொன்ன காரணம் இதுதான்..!

மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி விளக்கம் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெட்ரோல் டீசல் மூலம் வரும் வரிப்பணத்தை கொரோனா தடுப்பூசிக்கான செலவுகளை அரசு சமாளித்து கொண்டிருக்கிறது மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம் தந்துள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை எங்கோ உயர்ந்து கொண்டிருக்கிறது... எல்லா மாநிலங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விட்டது.. டீசல் விலையும் அதற்குமேல் உள்ளது..

கடந்த மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை அடிக்கடி உயர்த்தி வருகின்றன...

வாகனங்கள்

வாகனங்கள்

நடந்து முடிந்த தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டன. எனினும் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன.. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இந்த 7 வருஷத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன..

எரிபொருள்

எரிபொருள்

அதாவது, டெல்லியில் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் டர்பைன் எரிபொருள் லிட்டர் 79 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.. ஆனால், இதுவே பெட்ரோல், டீசல் விலை அதைவிட 30 சதவீதத்துக்கு மேல் அதிகமாக விட்டது.. விமானத்தை இயக்குவதைவிட பைக் போன்ற டூவீலர்களை ஓட்டுவதுதான் பெரும் சிக்கலாக உள்ளது.. இரு சக்கர வாகனத்தை இயக்குவதற்கான செலவு அதிகமாகவே உயர்ந்துவிட்டது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தும் வருகின்றன.

விளக்கம்

விளக்கம்

கடந்த வாரம், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பேசியபோது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு நோ கமெண்ட்ஸ் என்று மட்டும் பதிலளித்தார்.. கொரோனா பாதிப்பு முன்பு இருந்த நிலையை இப்போது இருக்கும் விலையோடு அதிகரித்துள்ளது... ஆனால் நாளுக்கு நாள் விலை உயருகிறது.. அதை பற்றி பேசவோ, எந்த கருத்தோ தெரிவிக்க போவதில்லை என்றார்.

செலவுகள்

செலவுகள்

இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலையை குறைக்காதது ஏன் என்பது குறித்து காரணம் சொல்லி உள்ளார்.. பெட்ரோல் டீசல் மூலம் வரும் வரிப்பணத்தை கொரோனா தடுப்பூசிக்கான செலவுகளை அரசு சமாளித்து கொண்டிருக்கிறது என்று புது விளக்கம் தந்துள்ளார். அந்த வரியிலிருந்து வசூலிக்கப்படும் நிதியானது, சாலைகள் அமைத்தல், ஏழைகளுக்கு வீடுகள் கட்டுதல் மற்றும் பிற சமூக நலத் திட்டங்களுக்கும் செல்கிறது என்று அமைச்சர் பூரி கூறியுள்ளார்.. மேலும், பெட்ரோலிய விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது, இந்தியாவுக்கு மட்டுமல்ல, இது ஒரு சர்வதேச பிரச்சினை ஆகும்.

Recommended Video

    ரொம்ப காஸ்ட்லி கிப்ட்! பெட்ரோல், டீசலை புதுமண தம்பதி்க்கு பரிசாக கொடுத்த சிங்கிள் பசங்க.. வைரல்!!
    இந்தியா

    இந்தியா

    இப்போது இந்தியாவில் ஒருகோடி தடுப்பூசிகளை நிறைவு செய்ததாகவும், தொற்றுநோய்களின் போது 90 கோடி மக்களுக்கு ஒரு வருடம் முழுவதும் ஒரு நாளைக்கு 3 வேளை உணவு வழங்கியதாகவும், 8 கோடி ஏழை பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு எல்பிஜி ரீஃபில் வழங்கும் உஜ்வாலா திட்டம் செய்ததாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்..

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+