சிட்னி முருகன் ஆலயத்தில் வைகாசி விசாகம்: குருபெயர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஆஸ்திரேலியாவில் சிட்னி மாநகரின் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகப் பெருமான் அவதரித்த நாளான வைகாசி விசாகத் திருவிழா இந்தியா மட்டுமல்லாது தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள முருகன் ஆலயங்களில் நேற்று (11.06.2014) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சிறப்பு அபிஷேகம்

சிறப்பு அபிஷேகம்

காலை 5:30 மணியளவில் இடம்பெற்ற மூலவர் முருகனுக்கான அபிசேகத்தினைத் தொடர்ந்து 7:00 மணியளவில் காலைப் பூசையும் முற்பகல் 10:00 மணியளவில் இரண்டாம் கால சந்திப் பூசையும் இடம்பெற்றன.

உச்சிகாலபூஜை

உச்சிகாலபூஜை

முற்பகல் 10:30 மணியளவில் உற்சவர் ஆறுமுகசுவாமிக்கான அபிசேகத்தினைத் தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு உச்சிக்காலப் பூசை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலைப் பூஜை

மாலைப் பூஜை

முதலாவது சாயரட்சை பூஜை 5:00 மணியளவிலும் இரண்டாவது சாயரட்சை பூஜை 6:30 மணியளவிலும் இடம்பெற்றது.

வசந்த மண்டப பூஜை

வசந்த மண்டப பூஜை

இதனைத் தொடர்ந்து மாலை 6:45 மணியளவில் சண்முகார்ச்சனையும் 7:15 மணியளவில் வசந்த மண்டபப் பூசையும் நடைபெற்றது.

மயில்வாகனத்தில் முருகன்

மயில்வாகனத்தில் முருகன்

மயில் வாகனத்தில் முருகப் பெருமான் இரவு 7:45 மணியளவில் எழுந்தருளி செய்து உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வந்தார்.

அர்த்தசாம பூஜை

அர்த்தசாம பூஜை

இதனைத் தொடர்ந்து இரவு 8:30 மணியளவில் இடம்பெற்ற அர்த்த சாமப் பூசையுடன் வைகாசி விசாக நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.

குருப்பெயர்ச்சி சிறப்பு ஹோமம்

குருப்பெயர்ச்சி சிறப்பு ஹோமம்

இதனிடையே வரும் சனிக்கிழமையன்று (14.06.14) குருபகவான் மிதுன இராசியில் இருந்து கடக இராசிக்கு பிரவேசிப்பதனை முன்னிட்டு தட்சணாமூர்த்தி மற்றும் குரு பகவானுக்கு சிறப்பு ஜெபஹோம அபிசேக பூசைகள் சிட்னி முருகன் ஆலயத்தில் இடம்பெறவுள்ளன.

குருபகவானுக்கு அபிஷேகம்

குருபகவானுக்கு அபிஷேகம்

காலை 5:30 மணிக்கு தட்சணாமூர்த்திக்கும் குரு பகவானுக்கும் அபிசேகம் நடைபெறும். காலை 7:00 மணி பூசையினைத் தொடர்ந்து சிறப்பு குருப்பெயர்ச்சி ஹோமம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முற்பகல் 10:00 மணிக்கு இரண்டாவது கால சந்திப் பூசையினைத் தொடர்ந்து மஹாபூர்ணாகுதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+