தைவான் தமிழ் சங்கத்தின் தை பொங்கல்..பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்
தைவான் தமிழ்ச்சங்கத்தின் தைப்பொங்கல். தைவானில் 11ஆம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாட்டம் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.
தைபே: தைவான் தமிழ் சங்கத்தின் தைப்பொங்கல் விழாவில் பரதநாட்டியம், ஒடிசி, குழந்தைகளின் நடனம், கலைஞர்களின் ஆடல் பாடல் என்று பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தைவான் நாட்டினர் மட்டுமல்லாமல் பல நாட்டு மக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்ததோடல்லாமல் அவர்களும் தங்கள் பங்களிப்பாக கலைநிகழ்ச்சி நடத்தி கொடுத்தார்கள்.
தைவான் தமிழ்ச்சங்கத்தின் 11 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா தைவான் நாட்டின் தலைநகரான தைபேயில் உள்ள ஃபூ ஜென் பல்கலைக்கழகத்தின் மேடம் ரிச்சி உள்ளரங்கத்தில் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. தைவான் தமிழ்ச்சங்கம் ஆரம்பித்து 10 ஆண்டுகள் முடிவடைந்து 11ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இன்றைய பொங்கல் விழாவில் சுமார் 250 பேர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

விழாவிற்கு வருகைபுரிந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் சங்கத்தின் துணை தலைவர் திரு. இரமேசு பரமசிவம் அவர்கள் அவர்கள் வரவேற்று உரையாற்றினார்.
தைப்பொங்கல் விழாவினை தைவான் தமிழ்ச்சங்க தலைவர் முனைவர் யூசி அவர்கள், இந்திய தைபே அசோசியேசனின் துணை முதன்மை இயக்குனர் திருமதி. அபர்ணா கணேசன் அவர்கள், டாடா கன்ஸெல்டன்சி நிறுவனத்தின் தைவான் நாட்டு பிரிவு தலைவராக உள்ள திரு. கார்த்திகேயன் சேதுமாதவன் அவர்கள், சீமென்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் திரு. ஆதித்யா ராமகிருஷ்ணா அவர்கள்,சூச்சோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியை முனைவர் காயத்திரி அவர்கள், பூ ஜென் பல்கலைக்கழகத்தின் சர்வதேச கல்விக் கழகத்தின் டீன் பேராசிரியை கோனி யாங் அவர்கள் மற்றும் ஜனாதிபதி அலுவலத்தின் உலக விவகாரத்திற்கான மூத்த ஆலோசகர் பேராசிரியர் வேய் ஷுங் வாங் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில், தைவான் தமிழ்ச்சங்கம் வருடம் தோறும் நடத்தும் சிறுவர்களுக்கான ஓவிய கண்காட்சி காணொளியாக திரையிடப்பட்டது. ஓவிய கண்காட்சியில் கலந்து கொண்ட 9 சிறுவர்களுக்கு தலைமை விருந்தனர் திருமதி. அபர்ணா கணேசன் அவர்கள் பரிசுவழங்கி ஊக்கப்படுத்தினார்.

கலை நிகழ்ச்சி:
தைவான் தமிழ்ச்சங்கத்தின் கலைநிகழ்ச்சிகள் எப்பொழுதும் நம்முடைய பாரம்பரியத்தை நினைவூட்டுவதாக இருக்கும். அந்த வகையில் தைப்பொங்கல் விழாவில் பரதநாட்டியம், ஒடிசி, குழந்தைகளின் நடனம், கலைஞர்களின் ஆடல் பாடல் என்று பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வீணை கலைஞர்கள் இன்னிசையால் அரங்கத்தை மெய்மறக்க செய்தனர். சிறுவர் சிறுமியரின் ஆடை அணிவகுப்பு பார்ப்பவர் அனைவரையும் பரவசப்படுத்தியது.

நூல் வெளியீடு:
தைவான் தமிழ்ச்சங்கம் எப்பொழுதுமே பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவித்துவருகிறது. இன்றைய பொங்கல் விழாவில் சிரஞ்சீவி ராஜ்மோகன் அவர்கள் எழுதிய அற்பமாயை என்ற நூல் அறிமுகப்படுத்தப்பட்டது. பேராசிரியர் வேய் ஷுங் வாங் அவர்கள் வெளியிட துணைப் பேராசிரியர் அருட்தந்தை ஸ்டானிஸ்லாஸ் இருதயசெல்வம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இணைப்பு பாலம்:
இந்த நிகழ்ச்சியில் தைவான் நாட்டினர் மட்டுமல்லாமல் பல நாட்டு மக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்ததோடல்லாமல் அவர்களும் தங்கள் பங்களிப்பாக கலைநிகழ்ச்சி நடத்தி கொடுத்தார்கள். இந்த வகையில் தைவான் தமிழ்ச்சங்கமானது இந்திய மற்றும் தைவான் மக்களிடையே இணைப்பு பாலமாக செயல்படுகிறது என்று சொல்வது மிகையாகாது. நிகழ்ச்சிகள் அனைத்தும் முனைவர் சதீஸ் குமார், திருமதி கீர்த்தனா கோகுல், திருமதி அனுபமா மல்லிகார்ஜுனன், திரு. அருண் ஆகியோரால் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அனைவருக்கும் புரியும் வகையில் தொகுத்து வழங்கப்பட்டது.
விழாவில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் சுமார் 250 பேருக்கு அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. தைவான் தமிழ்ச்சங்க பொது செயலாளர் முனைவர். ஆ.கு பிரசன்னன் அவர்கள் மற்றும் துணைப் பொது செயலாளர் திரு. சு.பொன் முகுந்தன் அவர்கள் விழாவை ஒருங்கிணைத்தார்கள். நிறைவாக தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் திரு. தங்கராசு அரிச்சந்திரன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!

Click it and Unblock the Notifications