கவிஞர் பாரிகபிலன்
Subscribe to Oneindia Tamil
உனது அந்த ஒரேயொரு புன்னகைதான்....
ஆடைகளை துவைத்து உடுத்துக்கொண்டு
அழகாகிக் போனேன்

நீச்சல் வீரனானேன்
விழாமல் மரமேறினேன்
தூரங்கள் அருகிலும் துயரங்கள் தொலைவிலும்
தொடங்கவேயில்லை இன்னும் எதையும்
சாதித்த மகிழ்ச்சி
நாகரீகம் கற்றேன்
என்னை நல்லவனாக்கியது உனதன்பு
திறந்து என்னை வெட்டவெளியாக்கினேன்
பூமி நமதென விடாமல் திரிந்தேன்
பயமற்றுப் போனேன்
நிம்மதியாகத் தூங்கினேன்
துக்கமற்றும் கிடந்தேன்
உனது அந்த ஒரேயொரு புன்னகைதான்.












Click it and Unblock the Notifications