சமூக சேவகர் எல்கேஎஸ் மீரானுக்கு துபாய் ஸ்டார் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி!
சமூக சேவகர் எல்கேஎஸ் மீரானுக்கு துபாய் ஸ்டார் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
துபாய்: சமூக சேவகர் எல்கேஎஸ் மீரானுக்கு துபாய் ஸ்டார் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் அமீரக வாழ் நெல்லைமாவட்ட மக்கள் மற்றும் காயிதே மில்லத் பேரவையினர் பலர் கலந்துகொண்டனர்.
அமீரகம் வாழ் ஒருங்கிணைந்த நெல்லை தமிழ் மக்கள் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் தாயகத்திலிருந்து வருகை தந்த பிரபல சமூக சேவகர் கல்வியாளர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் எல்கேஎஸ் மீரான் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை துபாய் தேராவில் உள்ள ஸம்மிட் ஹோட்டலில் நடைபெற்றது.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமீரகம் வாழ் அனைத்து தமிழர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அரிகேசவநல்லூர் எஸ்எஸ் மீரான் தலைமை வகித்தார்.
அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி, ஈமான் பொதுச்செயலாளர் ஹமீத் யாசீன், ரிஃபாயியா தரீக்கா கலீஃபா அமீர் ஹம்ஸா, பேராசிரியர் கலந்தர் மீரான், அமீரக காயிதேமில்லத் பேரவை பொருளாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான், துணைத்தலைவர் முஹம்மத் தாஹா, செயலாளர் வழுத்தூர் முஹைதீன் பாட்ஷா, ஈமான் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், ஈடிஏ பிபிடி மேலாளர் பீர் முஹம்மது ஆகியோர் வரவேற்று வாழ்த்தி உரையாற்றினர்.

இறுதியாக எல்கேஎஸ்.மீரான் உணர்ச்சிமிகு ஏற்புரை நிகழ்த்தினார். அமீரகம் வாழ் நெல்லை மாவட்ட மக்கள் மற்றும் காயிதே மில்லத் பேரவையினர் நிகழ்ச்சியில் பெருமளவில் கலந்து கொண்டனர்.
அரிகேசவநல்லூர் எஸ்எஸ் மீரானுடன் இணைந்து மேலப்பாளையம் நியாஸ் அலி மற்றும் சொக்கம்பட்டி முஸ்தஃபா நிகழ்ச்சியைச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications