உலக தொல்காப்பிய மன்றத்தின் சவுதி பிரிவு துவக்கம்: உறுப்பினர்கள் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

தம்மாம்: தமிழ்நாடு சமூக நல அமைப்பு தம்மாமின் ஒருங்கிணைப்புப் பணியில் "உலகத் தொல்காப்பிய மன்றம்- சவுதி அரேபியா பிரிவு" துவங்கப்பட்டது.

தம்மாம் தமிழ் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள விழா சிறப்புற நடைபெற்றது. செல்வி ரஹீமா சத்தார் திருக்குர்ஆன் கிராத் வாசித்தார். சவுதி திருநாட்டின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

அப்துல் சத்தார் விழா தலைமையுரையில் அமைப்பின் சமூக பணிகள் குறித்து விளக்கினார். சமூகப் பணியாளர் வெங்கடேஷ் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

World Tholkappia Mandram's Saudi branch inaugurated

தமிழகத்திலிருந்து வருகை தந்த உலக தமிழ் இஸ்லாமிய கழகத்தின் செயலாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தமிழக செயலாளர் இதாயதுல்லா அவர்கள் மிக சிறந்த பண்பாட்டு உரையை நிகழ்த்தினார்.

அவர் உலக தொல்காப்பிய மன்றம்- சவுதி அரேபிய பிரிவை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். தொல்காப்பியம் பனம்பாரனார் வழங்கிய பாயிரம் ஒலி வடிவம் இசைக்கப்பட்டது.

உலக தொல்காப்பிய மன்ற சவுதி அரேபியா பிரிவு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பாரதி தம்மாம், ரியாத், ஜெத்தா, அபஃஹா பொறுப்பாளர்களை அறிவித்தார்.

சபாநாயகம், சின்னையா டைர்ரஸ், சுரேஷ் குமார், ஷெரீஃப், இராபர்ட் ஜெரோம், இளையவாணன், மகாராஜன, நடராஜன், ஹலீம் ஆகியோர் சவுதி பிரிவு நிறுவனர் குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டது.

World Tholkappia Mandram's Saudi branch inaugurated

தம்மாம் பிரிவின் செயற்குழு சிறப்பு உறுப்பினர்களாக சதீஷ், அமீன், ரமேஷ் பாலன், ஹைதர் அலி, இராமசாமி, பரூக் ராஜா, பிரான்சிஸ் ரீகன், ஜோஸ், செல்ல மணிகண்டன், ஜாகீர், இராம மூர்த்தி, ஸ்ரீனிவாசன், வர்கீஸ், ஹபீப், தென்னவன், ஹனீஃப், ஆனந்த், கோடீஸ்வரன், வினு ராஜேந்திரன், பபிஷ் பாபு, சேட் சத்தார், ஜட்ஜஸ் ஆரீஃப், தமிழ் சொல்வேந்தர் மன்ற தலைவர் சிவ சக்தி கணேஷ் மற்றும் ஜி.கே. மணி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ரியாத் நகரின் தொல்காப்பிய பிரிவின் ஒருங்கிணைப்பாளர்களாக சமூக பணியாளரும் சவுதி தமிழ் சங்க பொதுச் செயலாளருமான இம்தியாஸ் அஹமத் மற்றும் குழு உறுப்பினர்களாக பேராசிரியர் லேசர் விஞ்ஞானி மாசிலாமணி, சபாபதி, சஜாவுதீன், ஜவகர், சென்னை மழை துயர் மீட்பு களப்பணித் தொண்டர் ஜமால் சேட், மற்றம் சிக்கந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜெத்தா நகர தொல்காப்பிய பிரிவின் ஒருங்கிணைப்பாளர்களாக ஜெத்தா தமிழ் மன்ற தலைமை குழு உறுப்பினர் சிராஜுதீன் மற்றும் குழு உறுப்பினர்களாக மல்லப்பன், விஜயன், ராஃபியா, அன்பு மணி மற்றும் வேதா நியமிக்கப்பட்டுள்ளனர்.

அபஃஹா நகர் தொல்காப்பிய மன்ற பிரிவு ஒருங்கிணைப்பாளர்களாக அபஃஹா தமிழ்ச் சங்க தலைவர் முருகதாஸ் மற்றும் குழு உறுப்பினர்களாக ராஜு மற்றும் டேவிட் கமலஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் சமூக தலைவர்களுக்கு "தொல்காப்பியமும் தொல்காப்பியரும" அறிமுக நூல் வழங்கப்பட்டது. நூல் பிரதிகளை தமிழ் சமூக இயக்க தலைவர்களுக்கு இதாயதுல்லா அவர்கள் மேடையில் வழங்கினார்.

தமிழ் ஆசிரியர்களின் தலைமையில் தொல்காப்பியம் பள்ளி மாணவர்களுக்கு பயிற்றுவித்தல், தமிழ் வெண்பா பயிற்சி கவிஞர்களுக்கும், தமிழார்வர்களுக்கும் அளித்தல், மாணவர்களின் தொல்காப்பிய பாடல் அரங்கேற்ற விழா என கண்ணான நோக்கங்களுடன் சவுதி பிரிவு உலக தொல்காப்பிய மன்ற வழிகாட்டுதலுடன் செயல்படும்.

உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி தமிழ் மொழி தான். அதை இளைய தலைமுறையினரிடம் தொடர்ந்து எடுத்துச் செல்லும் பணியை தமிழ் அமைப்புகள் செய்ய வேண்டும் என்று இதாயதல்லா கேட்டுக் கொண்டார். உலக தொல்காப்பிய மன்றத்தில் தன்னையும் இணைத்துக் கொள்வதாக அவர் கூறி மகிழ்ந்தார்.

தொல்காப்பியருக்கு காப்பிக்காட்டில் காப்பிய பூங்கா மணி மண்டபம் அமைப்பதற்கும், அதங்கோட்டு ஆசான் நினைவு போற்றவும் தமிழ்நாடு சமூக நல அமைப்பு தொடரும் பணிகளைப் பாராட்டினார். இந்திய பள்ளி தமிழ் மாணவர்களுக்கு தொல்காப்பிய பயிற்றுவித்தல் பணியை தமிழாசிரியர் குழு ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

பன்னாட்டு இந்தியப் பள்ளி தமிழாசிரியர்கள் திருமதி ஃபாத்திமா, திருமதி பிருந்தா தலைமையில் துணை முதல்வர் தனலட்சுமி இராமானுஜம், துணை முதல்வர் தஸ்னீம் முனீர், மனவள மருத்துவர் அபர்ணா திருக்குமரன், முனைவர் ஜூலியா, ஆசிரியை ஃபரீதா ஆகியோர் கொண்ட குழு தமிழ் மாணவருக்கான தொல்காப்பிய பயிலரங்குகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

உலக தொல்காப்பிய மன்றத்தின் செயர்குழுவின் வழிகாட்டுதலின்படி சவுதி அரேபிய கிளை தமிழ்த் தொண்டாற்றும்.

உலக தொல்காப்பிய மன்ற தலைவர் கவிஞர் கீ. பாரதி தாசன் (பிரான்ஸ்), துணை தலைவர் முனைவர் பாலசுந்தரம் (கனடா), செயலாளர். பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் (புதுச்சேரி), புரவலர் முனைவர் இளங்கோவன் (குவைத்) மற்றும் உலக நாடுகளின் பிரதிநிதிகளின் தொல்காப்பிய தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்து கூறப்பட்டது.

சவுதியிலுள்ள கவிஞர்களுக்கும், தமிழார்வலர்களுக்கும் கவிஞர் கீ. பாரதி தாசனாரின் வெண்பா மரபுக் கவிதை பயிர்ச்சி துவங்க முன்னெடுக்கப்படும். இஸ்லாமிய சமூக தலைவர்கள் உலக தொல்காப்பிய மன்றம்- சவுதி பிரிவில் தங்களையும் தமிழ்ப்பணிக்கு இணைத்துக் கொள்வதாக கூறினார்கள்.

விழா புரவலர்களான மதீனா குழும தலைவர் திரு. ஹலீம், சோழா வீடியோஸ் உரிமையாளர் திரு. சுபைர், அட்டஸ்ட் நிறுவன இயக்குநர் திரு. ஷெரீஃப், இந்திய சமூக பணியாளர் திரு. வெங்கடேஷ்,தொழில் முனைவர் திரு. பழனி, தம்மாம் தமிழ் அரங்கம் தலைவர் திரு. இராம நாதன், புரவலர் திரு. இராமனுஜம், எஸ். டி .கார்கோ நிறுவனர் திரு. அன்சாரி, கிங் ஃபகத் பல்கலைக் கழக பேராசிரியர் சலீம் யாவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது!

நிகழ்ச்சியை சொல்வேந்தர் குழும ஆளுநர் கவிஞர் ஹைதர் அலி அவர்கள் சிறப்புற தொகுத்து வழங்கினார். இந்திய சமூக பணியாளர் ஸ்ரீனிவாசன் அவர்கள் அனைத்து பொறுப்பாளர்ளுக்கும், ஆதரவாளர்களுக்கும் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+