மூளையுள்ள தமிழன்..- புலவர் செல்வக் கலைவாணன்
Subscribe to Oneindia Tamil
நன்மாறன் நெடுஞ்செழியன்குமணன் பாநலங்கிள்ளி நெடுங்கிள்ளிமன்னர் மன்னன்
அன்பழகன் அறிவழகன்கண்ணன் வேலன்அழகரசன் இளங்கோவன்கீரன் என்றே
இன்சுவையாய் இவைபோலபெயர்கள் உண்டுஇன்று ரமேஷ் சுரேஷ்கார்த்திக் ஆகின்றாரே
தென்னவனின் வழிவந்தஎன்ன வர்க்குத்தமிழ்ப் பற்றை அவர் பெயரில்தழுவச் செய்வோம்
தன்மான உணர்வென்பார்,கவரி மானின்தோன்றலாக மானுடத்தைப்பெற்றேன் என்பார்
பொன்நகையில் செம்புதன்னைகலத்தல் போலபூக்களிடை நச்சுமரம்விளைதல் போல
என்.மாறன் எம்.எஸ்.கே.பொன்னன் என்றேஆங்கிலத்தில் கலப்படம்தான்செய்கின் றாரே
முன்னெழுத்தைத் தமிழுெத்தால்எழுதச் செய்யும்மூளையுள்ள தமிழனுடன்நட்புக் கொள்வோம்.












Click it and Unblock the Notifications