மாணவர்கள் அறிவை என்சிஇஆர்டி முடக்கப் பார்க்கிறது! கொந்தளித்த பிரின்ஸ்
சென்னை: என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களில் ஆர்.எஸ்.எஸ் கொள்கையைப் புகுத்த முயற்சி செய்கிறது என்றும் மாணவர்கள் சரியான வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவர்களின் அறிவு சொத்தை முடக்குகிறது என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்து கூறியுள்ளார்.
ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் அயோத்தி தொடர்பான சில சர்ச்சையான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

ஆகவே இந்தப் பாடப் புத்தகங்களுக்குத் தலைமை ஆலோசகர்களாக இருந்த சுஹாஸ் பால்ஷிகரும் யோகேந்திர யாதவும் பாடப்புத்தத்தை வடிவமைத்தவர்கள் எனப் போடப்பட்டுள்ள பெயர் பட்டியலிலிருந்து தங்களின் பெயரை உடனடியாக நீக்க வேண்டும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுசில் அமைப்புக்கு (என்சிஇஆர்டி) கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அப்படி நீக்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இருவரும் கூறியிருந்தனர்.
புதியதாக திருத்தப்பட்ட பாடப் புத்தகத்தில் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி பெயரைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, 'மூன்று குவி மாடங்களைக் கொண்ட கட்டியம்' என்று மொட்டையாகச் சொல்லப்பட்டுள்ளது. இதற்குத்தான் இப்போது நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
என்சிஇஆர்டி தலைவர் டி.பி சக்லானிக்கு எழுதிய கடிதத்தில் யாதவும் பால்ஷிகரும் இதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனிடையே பாபர் மசூதி இடிப்பு, குஜராத் வன்முறை தொடர்பான பகுதிகள் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டது சரிதான் என என்.சி.இ.ஆர்.டி தலைவர் தினேஷ் பிரசாத் சக்லானி தெரிவித்திருந்தார்.
மேலும் அவர், "பாடப் புத்தகங்களை நாங்கள் ஒன்றும் காவிமயமாக்கவில்லை. பாபர் மசூதி இடிப்பு பற்றியும் குஜராத் வன்முறை பற்றியும் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. இது வன்முறைகளைப் பின்பற்றக் கூடிய குடிமகன்களைத்தான் உருவாக்கும். அதற்கான அபாயம் உள்ளது. ஆகவே ஒவ்வொரு ஆண்டும் பாடப் புத்தகங்களில் திருத்தங்கள் செய்யப்படும். இது வழக்கமான நடவடிக்கைதான்" என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் பற்றி தமிழகம் அறிந்த கல்வியாளர்கல்வியாளர் கஜேந்திரபாபு தனது கருத்துகளைக் கூறியுள்ளார்.
இந்தச் சர்ச்சை பற்றி அவர் பேசும்போது, "இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அயோத்தியில் ஏற்கெனவே மூன்று கட்டடங்கள் இடிக்கப்பட்டது எனப் பாடத்திட்டத்தில் உள்ளது.
அங்கே முன்பே மூன்று கட்டடங்கள் இருந்தன என்றால், அதற்கு என்ன பெயர்? ஆனால், புதியதாகக் கட்டப்பட்ட கட்டடத்திற்குப் பெயர் என்ன? அதை யார் கட்டினார்கள்? என்பதைக் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி கேள்வி எழுப்பினால், சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று பதில் வருகிறது.
அதற்கு மேலான விபரங்கள் தேவை என்றால் மாணவர்கள் ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்ளட்டும் என்கிறார்கள். இதை ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், புதிய கட்டடத்தைப் பற்றிய தகவல்களையும் அவர்களே தேடித் தெரிந்து கொள்ளட்டும் என விட்டுவிடலாமே?
இது மாணவர்கள் பெற வேண்டிய அறிவை முடக்குகின்றது என்று இதைச் சொல்வோம். மாணவர்கள் பெற வேண்டிய சரியான அறிவை பெறவிடாமல் தடுக்கும் ஒரு ஏற்பாடு இது. வரலாற்றை வரலாறாகச் சொல்லாமல், எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் மாணவர் வரலாற்றைக் கற்க வேண்டும் என நினைக்கிறார்களோ அதற்குத் தக்கச் சொல்லிக் கொடுப்பது.
தேர்தல் தொடர்பான வரலாற்றை விளக்கும் பகுதியில் வாக்கு வங்கி அரசியல் என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளனர். நியாயத்தைப் பேசுவதை எப்படி வாக்கு வங்கி அரசியல் எனச் சொல்ல முடியும்?
மக்களிடம் வாக்குச் சீட்டு உள்ளது. அவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களுக்கு ஓட்டுப் போடுகிறார்கள். அந்த மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை வாக்குறுதியாக அளிப்பது தான் அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமை. அதை தவறாகச் சித்திரிப்பது எப்படிச் சரியாகும்?

அப்படி என்றால், மதச்சார்பின்மையின் நோக்கம், அதைச் செயல்படுத்தும் அரசியல் கட்சிகள் மீதான விமர்சனத்தை இந்தப் பாடத்திட்டம் முன்வைக்கிறது. அதை எப்படி ஏற்க முடியும்?
எனவே என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை இப்படி தன் போக்கில் ஒரு சாராருக்கு ஆதரவாக மாற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது. இதை அனுமதிக்க முடியாது. மேலும் இதைப் படித்து வளரும் தலைமுறை குழப்பத்திற்கு ஆளாவார்கள்.
வரலாற்று அறிஞர்களின் கருத்தைக் கேட்டு, இந்தத் தவறுகளை மாற்றி அமைப்பதுதான் சரியான முறையாக இருக்கும். அதைவிட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை நேரடியாகப் பாடத் திட்டத்திற்குள் கொண்டுவரும் இந்த முயற்சியாகவே என்சிஇஆர்டி-யின் நடவடிக்கை உள்ளது.
அகண்ட பாரதம் என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கை. அதைக் கட்டமைக்கும் முயற்சி இந்தப் பாடத்திட்டத்தில் புகுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் புதிய அறிவை பெற முடியாது. இது இந்தியாவின் எதிர்கால தலைமுறைக்கு நல்லதல்ல" என்று கூறுகிறார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications