புலத்திலே பதியம்
Subscribe to Oneindia Tamil
வித்தூன்றி நிலத்தில்
வேர் கொண்டெழும் வரைக்கும்
விட்டு வைத்து விட்டு,
மிளகாய் நாற்றுப் போல
பக்குவமாய்
பிடுங்கவில்லை.
எருவும், தழையும்
இலை குழையும் போட்டு
எட்டடிக்கு நாலடி பாத்திகட்டி
கத்தரிக் கன்று போல
எங்களை நடவில்லை.
பூச்சாடி நிறைய
புதுசா மண் போட்டு
நட்ட தடி முளைக்கும்
நாளை எதிர்பார்த்து
ரோசாச் செடி போல
கவனிப்புச் செய்யவில்லை.
நட்ட பின் தோட்டத்தில்
பூவாளி நீரும்,
நாலாம் நாள்;
எட்டாம் நாள்
இறைப்புகளும்
புகையிலைக்கன்றி
எங்களுக்கில்லை.
கூடில்லை
வேலியில்லை
வெயில் கொடுமைக்கு
குழை கூடக் குத்தவில்லை!
பிறந்த மண்ணிலிருந்து
வேரோடு பிடுங்கி
உயிர்...
பிழைத்துப் போவென
எறிந்தார்கள்.
வந்து விழுந்தோம்
புலத்தில்.
பதியன்களாய்;
தக்கன முளைத்தோம்
தகாதன,
வரும் வழியிலேயே
அழிந்து போனோம்!!
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications