கண்ணில் தெரியுது வானம்- ஈழநாதன்
ஷெல் கூவியன்றி
சேவல் கூவி விடியும்
எங்கள்
இளங்காலைகள்.
நான்காம் சாமத்திலும்
நிம்மதியாய்
படுக்கை அறையில்
தூங்கிக் கொண்டிருப்போம்.
பதுங்கு குழி மூடி
நட்ட ரோசா
பூத்துப்
பனிக்குளித்து நிற்கும்.
சோக கீதம் கேட்காது
சுப்பிரபாதத்துடன்
இனிதே நடக்கும்
எங்கள் துயிலெழுகை.
இயற்கை மரண
அறிவித்தல்களை மட்டுமே
தாங்கிவரும்
காலைத் தினசரிகள்.
இலவசமாய்
பத்திரிக்கை படித்தபின்
நல்லதையே சொல்லிப்போகும்
பக்கத்து வீட்டு மாமா.
வரிசையில் நிற்காது
வாங்கி வந்த பாணுடன்
நிறைவுறும்
காலையுணவு.
பொம்மர் வராததால்
மதிய இடைவேளைக்குப் பின்னும்
தொடரும்
பாடங்கள்
அடையாள அட்டையின்றி
சோதனைச் சாவடியின்றி
விரும்பியபடி
எங்கும் பயணம்
மாலையில்
ஒழுங்காக வீடுதிரும்பும்
இளைஞர்கள்,
யுவதிகள்.
இருட்டியபின்னும்
அடங்காத
ஊர்.
************
அலாரத்தின் ஓசையில்
திடுக்குற்று விழித்தபோது
வானொலி
காலைச் செய்தியை
ஒலிபரப்பியது.
"இலங்கை
இனப்பிரச்சனைக்கு
விரைவில்
சுமுகத் தீர்வு.
ஜனாதிபதியும் புலிகளும்
நம்பிக்கை தெரிவிப்பு".
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications