நிசம்தானா ஆண்டவனே?
Subscribe to Oneindia Tamil
மழழைச் செல்வங்கள்
நெருப்பில் கறையும்போது
ஈரமில்லா மழையே
எங்கு சென்றாய் நீ?
வாழ்வில் உயர
வழிகாட்டிய ஆசிரியர்களே!
வாழ்க்கையே தொலையும்போது
எதைத் தேடிச் சென்றீர்கள்?
ஆண்டுக்கு ஒருமுறையாவது
ஆய்விற்கு சென்றிருப்பீர்கள்,
அலுவலர்களே!
அந்த ஓலைக்கூரையும்
ஒடுக்குப் படிகளும்
உங்கள் கண்ணில் படவில்லையா?
அது பள்ளியே இல்லையென்று
பலமாய் குரலெழுப்பும்
எங்கள் பாதுகாவலர்களே!
இதோ பாடம் படித்து விட்டீர்கள்
எதிர்கால இந்தியாவை
இனியாவது காப்பீர்களா?
தூணிலும் இருப்பாய்
துரும்பிலும் இருப்பாய்
நெருப்பில் மட்டும்
நீ இல்லை
நிசம்தானா ஆண்டவனே ?
- கண்ணீருடன்
- மு.ஜெயக்குமார்.([email protected])












Click it and Unblock the Notifications