கடிதம்- பத்மப்ரியா
கவிஞன் என்றாய்
"கவிதைகள் ஐம்பது " என வெளியிட்டாய்
இரண்டு கிடைத்தது, மற்றவை?
புலம்பல்களுக்கும் சாடல்களுக்கும்
புரட்சித் தலைப்பிட்டிருந்தாய்
காலரை தூக்கி கால் வீசி நடந்தாய்
உணர்ச்சிபூர்வமானவன் கவிஞன் என
உருவேறியிருந்த எங்களுக்கு -- நீ
ஒரு மின்சார தாக்குதல்
சண்டையிடும் சகாக்கள் இருவரை
சலனமின்றி கடந்து
" சமூக நீதி " கவிதையை
சமூகத்திற்கு அர்ப்பணித்தாய்
முறுகக் காயும் வெயிலில் பிச்சை கேட்ட
முதியவரை விரட்டி
கார் கண்ணாடி உயர்த்தி
"கருணமழை" கவிதையை
கண்பார்வையற்றோருக்காக என்றாய்
வெகுளியுமில்லை, வேதாந்தியுமில்லை
ஏழையுமில்லை, ஏமாளியுமில்லை- -பின்பு
எப்படி கவிஞனாவாய்?
அடிப்படையில் மனிதனாகு
அதன்பிறகு கவிஞனாகலாம்
அச்சக உரிமையாளரான நீ
கவிதைத் தொகுப்பென ஒன்று
தாராளமாய் வெளியிடலாம்
யாராலும் தடுக்க இயலாது- - ஆனால்
வாசகர் நலனுக்காக இரு வேண்டுதல்
1.அட்டையின் மேல் "அபாயம்" என்றும்
2. இரு கவி தந்த கவியின் பெயர் முன் " உபயம்" என்றும் அச்சிட வேண்டும்.
- பத்மப்ரியா([email protected])
இவரது முந்தைய படைப்பு:
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications